உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி) திருப்புகழ் உரை 7 செவ்விய பொலிவுள்ள பருத்த கொங்கைப் பாலைக் குடிக்கின்ற நாள்கள் பல செல்லப் பின்பு அழகிய தவழ் நடை நாள்களும் செல்ல, ஒழுங்கான பல (சிங்கி) விஷம் அனைய பெரிய கண்களை உடைய பொதுமகளிரொடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அழிந்து போவேனோ! அங்கைத்து அரி யெனவே (திருமால் கையகத்து உள்ளான் - (உள்ளங்கை நெல்லிக் கனிபோல எளிதிற் புலப்படுவான்) என்று ஒரு (பாலகன்) பிள்ளை - பிரகலாதன் - கூறிட - இன்பக் கிருபையதாய் - (அந்தப் பாலகனுடைய பேச்சுக்குக் குறை வராத வழியில்) இன்ப அன்புடனே ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக்கொண்ட (கொடு) பயங்கரமான (அரியாய்) நரசிங்கமாய்த் (தோன்றி) இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து தேவர்களுக்கு உதவி புரிந்த பெருமான், முதிரா அணி (ஒழியாத) தம்மைவிட்டு நீங்காத பரனங்களான (ப்ர்ஞ்சசன்னிய்ம் என்னும்) சங்கையும், (சுதரிசனம்என்னும்) சக்கரத்தையும், திருக்கரத்திற் கொண்டவன், அரி (ஹரி) நார - (காவிரி - கொள்ளிடம் என்னும் நதியின்) நீரிடையே உள்ள (அரங்கத்து) சிரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேடன் என்னும்) சிறந்த பெரிய அணைமேல் துயில் கொள்ளும் பள்ளி கொள்ளும் நாராயணமூர்த்தியாகிய திருமாலின் மருகனே! கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபிரானுடைய இடது பாகத்திற் பொருந்தியவளாய்த் தங்கம், பவளம் இவற்றின் ஒளியும் கொண்டவளாய், பால்நிறத்துவெண்மதி போலத் திருமுகம் கொண்டவளாய், இருள் கொண்ட கூந்தலை உடைய பரமேசுரி அருளிய குழந்தையே! (கந்துப் பரிமயில்) பாயவல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல் இருகொங்கைகளை உடைய குறமகள் வள்ளியை - ஆசையுடனே மகிழ்கின்ற பெருமாளே! கங்கை நதிக்கரையில் உள்ள (பதி) ஸ்தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே! (பெருவிழியார் அவமாய் அதில் அழிவேனோ)