உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலுர்) திருப்புகழ் உரை 41 (வந்தவர்களை) அசடர்களாக ஆக்குபவர்கள் மார்பு மேலே உள்ள கொங்கைகளைக் காட்டுபவர்கள், கூச்சம் இல்லாமல் (மேலே) விழுந்து தமது அழகைக் காட்டுபவர்கள், யாராயிருந்தாலும் (அவர்கள்மீது) அன்புள்ளவர்கள் போலச் சாமர்த்தியமாய்த் திரிதலில் ஒய்தல் இல்லாத (எப்போதும்திரியும்) வேசிகள், அருள் நோக்கம் என்பதே இல்லாத மகா பாவிகள், வேண்டுமென்றே அலகூதியம் செய்கின்ற - புறக்கணிக்கின்ற - (தோஷா தோஷிகள்) பலவித (தோஷம்) குற்றம் - பாவம் - செய்பவர்கள் - நம்புதற்கு முடியாத பக்குவ வார்த்தைகளால் - இனிய காம சேஷ்டையை வளர்க்கும் பேச்சினால் வாதுசெய்து காமத்தை மூட்டி (வந்தவர்களை) விடாது போக ஒட்டாது பிடிக்கவல்ல மூதேவிகள் - (அத்தகைய பொது மகளிருடன்) (தகைமை நீத்து) கூடும் நிகழ்ச்சிகளைவிட்டு உன்னுடைய திருவடிகளை நான் (சேர்வதும்) இடைவிடாது ந்திப்பதுமான ஒரு நாள் உண்டோ? ஒரு நாள் கிடைக்குமா! மதுரைப் பிரதேசத்திலே வாழ்ந்திருந்த சமணர்களின் பேச்சிலே - கொள்கையிலே ஈடுபட்டிருந்த பாண்டியன் உடல்மீது திருநீறு பூசி, அவனுடைய கூன் நிமிரவும் பொருந்திய (வைகை) யாற்று வெள்ளநீரை எதிர்த்து (வீறுடன்) சிறப்புடன் (அவ் வெள்ளநீரில்) இட்ட ஏடு மேற்செல்லவும், (அழகி போற்றிய மகிமையால்)....அழகு நிறைந்த பாண்டிமாதேவி - மங்கையர்க்கரசி உன்னைத் துதித்துப் போற்றிய பத்தியின் சிறப்பாலும், (மாறாலாகிய மகிமையால்) மாறுபட்ட (பகைமை பூண்ட) சமணர் வாதத்தினால் ஏற்பட்ட நிகழ்ச்சிச் சிறப்பாலும் அல்லது அழகி போற்றிய மாறால் - வகையினால் ஏற்பட்ட சிறப்பாலும்) அந்த சமணர்கள் வேருடன் அழிய வெற்றி கொண்ட தலைவனே! புதிய மாங்கனிகளினின்றும் விழுகின்ற தேன் ஊறல்களும், பகலும் இரவும் ஓயாது வேலை செய்யும் கரும்பாலைகளின் மேலே புரண்டு, மேற்சென்று, அயலில் உள்ள பல ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற