உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்சிபுரம்) திருப்புகழ் உரை 49 ஆராய்ச்சி செய்துள்ள <2\,...soll சமயத்தாருக்கும் பொருந்தியுள்ள (கிறி) தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின் குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க வாதப்போர் செய்து, அவர்களுடைய உயிருள்ள உடலைக் கழுமுனையில் வைத்திட்டவனே! (கமுகமரத்தின்) பாக்குமரத்தின் குலை அற்றுவிழ (அந்த குலை தன்மீது விழுவதால்) கதலியில் - வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ (அந்தப் பழங்கள் தன்மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ (அல்லது, கமுகங்குலை விழவும், கதலிக்கனி விழவும், கரும்பு முத்து உதிரவும்) (அத்தகைய வேகத்துடன) கயல்மீன்கள் குதித்து விளையாடும் நல்ல பெருமைவாய்ந்த வயல்கள் விளங்கும் அழகைக் கொண்ட கரபுரம் எனப் பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் (வீற்றிருக்கும்) ஆறுமுகப் பெருமாளே! (நினைத்திட அருட்டருவாயே) 673. (குலையமயி ரோதி) - ஒதி மயிர் குலைய கூந்தல் மயிர் குலைந்துபோக, கண்கள் குவிய, விளக்கத்துடன் குருகின் இசை கோழி முதலிய எட்டுப் பறவைகளின் புட்குரல் இசைபாடி (ஒலிசெய்து) முகத்தின் மேலே. சிறு வியர்வை தோன்றி உலவ, அமுதம்போல இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு வழியாகத் தோன்றவே (அல்லது ஆறுபோலப் பெருகவே). பலவகைப்பட்ட விநோதங்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்பும் அசைந்தொலிக்கப் படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை விடுவதற்கு மனம் ஒத்துக்கொள்ளாத இப் பாதகனையும் ஆண்டருள நினைந்தருளுக. வில்லாக (மேரு மலையைக்கொண்ட பரமர் தந்த குமரனே! மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே!