உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *திரியு மும்பர் நீடு கிரி பிளந்து ஆரர் செரு வடங்க வேலை விடுவோனே. செயல மைந்த வேத தொணிமு ழங்கு வீதி திருவி ரிஞ்சை மேவு பெருமாளே. (5) திருவாலங்காடு. (ரெயில்வே ஸ்டேஷன் சென்னைக்கு மேற்கு 37 மைல். மூவர் தேவாரம் பெற்ற முதுநகர். காரைக்கால் அம்மையார் பதிகம் பாடி அப்பன் திருவடிக் கீழமர்ந்தருளும் தலம். பஞ்ச சபைகளுள் இது ரத்ந" சபை. பழையனூர்' என்னும் ஸ்தலம் திருவாலங் காட்டுக்குக் கிழக்கு 1 மைல் தூரத்திலுள்ளது. ஸ்தலபுராணம் உண்டு.) 677. தியானிக்க தனதானந் தானன தானன தனதானந் தாண்ண தாணன தனதானந் தானன தானன தனதான கணவாலங் கூர்விழி மாதர்கள் t மனசாலஞ் சால்பழி காரிகள் கணபோகம் போருக மாமிணை முலைமீதே. கசிவாருங் கீறுகி ளாலுறு வசைகானுங் காளிம வீணிகள் # களிகூரும் பேயமு தூணிடு கசுமாலர்; மனவேலங் கீலக லாவிகள் மயமாயங் கீதவி நோதிகள் மருளாருங் காதலர் மேல்விழு மகளிர்வில்.

  • எழுகிரியின் வரலாற்றை பாடல் 257-பக்கம் 140-கீழ்க்குறிப்பிற் காண்க. சூரனுடன் இம் மலை அவனுக்கு அரணாகித் திரிந்த தென்பதைத் தக்கயாகப்பரணி 5ன் விசேடக் குறிப்பைப் (பக்கம் 259) பார்க்க

f மனசால் அஞ்சால் ஐந்தால் - ஐம்பொறிகளால் நெஞ்சால் . அஞ்சால் - என்றார் 678 ஆம் பாடலில் + பேயமுதுண் - ஆவேச நீர்' என்றார் பிறிதோரிடத்து பாடல் 362.