உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலங்காடு திருப்புகழ் உரை 63 மலையை (விண்) மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்பு காத்தவரும், பூமியை உண்டவருமான திருமாலின் பாராட்டு மிக்குள்ள மருகனே! ங்கொத்து நிறைந்த பசிய மாலை யணிந்துள்ள திண்ணிய கொங்கைகளை உடைய குறமின்) வள்ளியின் திருவடிகள் (சிந்தாச் சிந்தையில்) நீங்காத தன் மனத்தில் காம மயக்கம் கொண்டு (அவளிடம்) போப் (என்னை) ஆட்கொண்டு அருளுக எனக் கூறினவனே! அன்று திருவாலங்காட்டில் தேவர்களும் பிழைக்க நின்று ஆடின (கூத்தன்) சிவபெருமானது திருவருள் அங்கு கூடும்படியான பதிகப் பாடல்களின் பயனை எடுத்து ஒதி அருளிய செல்வமே! அன்பால் உனது திருவடியைக் கும்பிடுவர்களுடைய பாவத்தைத் தொலைத்து இப் பூமியிலே (அவர்களுக்கு) அஞ்சாத நெஞ்சத்தையும் (ஆக்கம்) செல்வங்களையும் தரவல்ல பெருமாளே! (நின் தாள் தந்து ஆட்கொண்டருள்தர நினைவாயே) X அண்டர் உப்ய ஆடினது: 'கொடிய வெஞ்சினக் காளியிக் குவலயம் முழுதும் முடிவு செய்வனென் றெழுந்த நாள் முளரியான் முதலோர் அடைய அஞ்சலும் அவள் செருக் கழிவுற அழியாக் கடவுள் ஆடலால் வென்ற தோர் வடவனம் (கண்டான்)" - கந்த புரா வழிநடை - 8. 0 பாட்டின் பயனினை யருளினது: சம்பந்தப் பெருமானாகத் தாம் பாடின. ஒவ்வொரு பதிக ஈற்றிலும் அப் பதிகப் பயனை ("ஞான சம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே" முதல் ஞான சம்பந்தன்.ஒண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவ மவல மிலரே" வரை) என உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார். (I-1-11.3-125---11) ==

    • "அஞ்சா நெஞ் சாக்கந் தரவல பெருமாளே." - இது மனப்பாடம் செய்ய வேண்டிய அடி - பாடல் 1183 ஈற்றடியையும் பார்க்க

"பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் தஞ்சமென் றிறுமாந் திவளாரையும் அஞ்சவா ளல்லள்" - அப்பர் 5-29.7.