உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 679. கதி பெற தனதன தானந் தாத்த தனதன. தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதான புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி புதுமன 'மானும் பூட்டி யிடையூடே பொறிபுல ணிரைந் தர்க்கி கருவிகள் நாலுங் காட்டி புகல்வழி நாலைந் தாக்கி வருகாயம்; பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி பசுபதி பாசங் காட்டி ւ6ՆւDո աւபடிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி பரகதி தானுங் காட்டி யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க திருதட மாடுங் கூத்தர் முருகோனே. திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க மயிலேறிக் குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி குதர்வடி வேலங் கோட்டு குமரேசா. குவலயம் யாவும் போற்ற #பழனையி லாலங் காட்டில் Xகுறமகள் பாதம் போற்று ă

  • மான் - குதிரை, புத்தி தத்துவம்

t தவமுநிவோர் - திருவாலங்காட்டிற் கார்க்கோடகன் முஞ்சி கேசர் என்னும் முநிவர்கள் சிவபிரானது அருளைப் பெற்று அவரது நடன தரிசனத்தைப் பெற்றார்கள். (திருவாலங்காட்டுப் புராணம்)

  1. பழனை - பழையனூர். இந்த ஊர் திருவாலங்காட்டுக்கு மிக அருகில் உள்ளது. தேவாரத்திலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே" எனச் சம்பந்தரும், பழனைமேய ஆலங்காட்டடிகள்' பழனைமேயார் பழணைபதியா உடையார்' என அப்பரும், "பழையனூர் மேய அத்தா! ஆலங்காடா' - எனச் சுந்தரரும் பழையனூர் ஆலங்காடு என இரண்டு ஊரையும் சேர்த்தே பாடியுள்ளார்கள்.

x குறமகள் பாதம் போற்று பெருமாள் - என்பது குறமகள் முருகவேளின் பாதம் போற்றுகின்றாள். குறமகளின் பாதத்தை முருகவேள் போற்றுகின்றார் . என இருவகையும் பொருள்பட நிற்கின்றது. (பாடல் 665-பக்கம் 26 பார்க்க)