பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை காழ்க்காதல தாமண மேமிக வார்க்காமுக ணாயுறு சாதக மாப்பாதக் னாமடி)யேன்ை*நி னருளாலே, பார்ப்பாயலை யோவடி யாரொடு சேர்ப்பாயலை யோவுன தாரருள் கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா. fபார்ப்பாவல ரோது.சொ. லால்முது நீர்ப்பாரினில் மீறிய சீரரை யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ லருள்வாயே: வார்ப்பேரரு ளேபொழி காரண நேர்ப் பாவச் காரண மாமத ஏற்பாடிக ளேயழி வேயுற அறைகோப. வாக்காசிவ மாமத மேமிக க்காதிய Xயோகம தேயுறு மாத்தாசிவ பாலகு காவடி யர்கள்.வாழ்வே, வேற்காடவல் வேடர்கள் மாமக ளார்க்கார்வ நன் மாமகி னாதிரு வேற்காடுறை **வேதபு ரீசுரர் தருசேயே.

  • நின் அருளாலே பார்ப்பாயலையோ ... குமரேசா". இந்தப்பகுதி. பத்திச்சுவை- சொட்டும் பகுதி...மனப்பாடத்துக்குத் தக்கது t பாவலர்களுள் நக்கீரரின் தலைமை: 'பொய்யற்ற கிரன் முதலாம் புலவோர் புகழ்ந்த ஐயற் கெனது சிறு சொல்லும் ஒப்பாகும்". கந்தபுரா 6.264

திருமுருகாற்றுப்படை கேட்டு முருகவேள் மகிழ்ந்தது "வள்ளி கன்னலும் அமுதும் தேனும் கைக்குமின் தீஞ்சொல் மாற்றித் தன்னிகர் புலவன் கூறுந் தமிழ்செவி தாழ்த்துக் கேளா அந்நிலை மனங்களிப்புற் றறுமுகம் படைத்த கோமான்" - காளத்-புரா. இறையனார் அகப்பொருளின் உரையை நக்கீரர் சொல்லக் கேட்டு முருகவேள் மகிழ்ந்தது - பாடல் 350 பக்கம் 378.379 பார்க்க

  1. பாவ ச காரணமாம் - பாவத்துக்குத் துணைக்காரண மாகிய, X யோகமதே உறும் மாத்தா"-முருகவேளுக்கு யோகா சாரிய மூர்த்தி" என்று ஒரு பெயர் கபிலர், கெளதமர், துர்வாசர், பைங்கலர் முதலிய முநிவர்களின் தவத்துக் கிரங்கி முருகவேள் யோக இயலை உணர்த்தும் திருக்கோலத்துடன் வீற்றிருந்து பலவகைத்தான யோகங்களின் இலக்கணங்களை அவர்களுக்கு உபதேசித்தார். சுப்பிரமணிய பராக்ரமத்தில் இதன் விரிவைக் காண்க. யோகத்தாறுபதேசத் தேசிக" - திருப்புகழ் 68.

(தொடர்ச்சி பக்கம் 81 பார்க்க)