பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேற்கடு) திருப்புகழ் உரை 79 (பாடு) பெருமை வாய்ந்த (அம்பு) அம்புபோல (ஆர்) கூர்மை கொண்ட (திரிசூலம்) முத்தலைச் சூலத்தால் (நீடு) மேம்பட்டு நின்ற (அந்தக) அந்தகாசுரனை - (அரவு) வருத்தின (வீர) வீரனான அல்லது ஈர கருணையாளனான) சிவன்மீது (பாசம்) பத்தி - அன்பு (தா) தாவுதல் - பாய்தல் உடைய திருமாலின் மருகனே! வேல் போலவும் அம்பு போலவும் உள்ள கண்களைக் கொண்ட (குறமாது) வள்ளியும், மேல் (உ.ம்பர்) விண்ணோர் வளர்த்த மாது தேவசேனையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு புறமும் பொருந்த விளங்கும். வேத முடிவில் இருப்பவனே! அழகனே! நாத (ஒலி) முடிவில் இருப்பவனே! திருவருளைப் பாலித்துப் பரப்பும் பெருமாளே (வேலங்காடு) திருவேற்காடு என்னும் தலத்தில் வீற்றிருக்கின்றது.ாய பெருமாளே. (யமன்மீறு காலந்தான் ஒழிவேது உரையாயோ) 685. மேகத்தைச் (சார்ந்த) ஒத்த கூந்தலை உடையவர்கள், கண் (ஆர்) கூரிய (அயிலார்) வேல் போன்றவர்கள், பால்போல இனிய மொழியை உடையவர்கள், இடையானது நூல்போல நுண்ணிதாகக் கொண்டுள்ளவர்கள், பொருந்திய இளநீருக்கு ஒப்பான கொங்கையை உடைய மாதர்கள் மீதுள்ள மோக மயக்கத்தாலே. சிவபிரானது உடலிடத்தே திருமால் இடம் பெற்றுள்ளார். 2-67-1 ர் பாகம் உடையார்"...சம்பந்தர் "חםL" "பாதியாவுடன் கொண்டது மாலையே" - சம்பந்தர் 3.115.2 "பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து" பெரிய திருமொழி 3.4.9. 'மலைமங்கை தன் பங்கனை பங்கில் வைத்துகந்தான்" ...பெரிய திருமொழி 7.10.3. "மாலை இடப் பாகத்தே மருவக் கொண்டார்" ...அப்பர் 6.96.3; "மறிகடல் வண்ணன் பாகா"...அப்பர் 4-62-8. .திருப்புகழ் பாடல் 37.பக்கம் 105 கீழ்க்குறிப்பு.