பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவொற்றியூர். (ரெயில்வே ஸ்டேஷன். சென்னைக்கு வடக்கு 5 மைல். மூவர் தேவாரமும்பெற்ற முதுநகர். ஸ்தலபுராணம் உண்டு) 690. ஞானம் பெற தனதண்ன தான தனதனன தான தனதனன தான தனதான கரியமுகில் போலு மிருளளக பார கயல்பொருத வேலின் விழிமாதர். கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர களபமுலை தோய அணையூடே விரகமது வான மதனகலை யோது வெறியனென நாளு முலகோர்கள். விதரணம தான வகைநகைகள் கூறி விடுவதன்முன் ஞான அருள்தாராய், அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர் அவர்கள் புக ழோத புவிமீதே அதிக நட ராஜர் பரவுகுரு ராஜ அமரர்குல நேச குமரேசா; சிரகர கபாலர் அரிவையொரு பாகர் திகழ்'கநக மேனி யுடையாளர். திருவள்ரு t மாதி புரிய தனில் மேவு ஜெயமுருக தேவர் பெருமாளே.(1)

  • சிவபிரான் பொன் வண்ணத்தவர். 'பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ஈசனுக்கே" பொன்வண்ணத்தந்தாதி (1)

1 ஆதிபுரி யென்பது திருவொற்றியூர் "திருந்துமொரு பூலோக சிவலோக மென்னப் பொருந்தி அருளே பரவுபுரி யென வகுத்தே இருந்தருளி ஆதியில் இயற்றியிட லாலே அரும்புரியின் நற்பெயரை ஆதிபுரி" என்றான்" - திருவொற்றியூர்ப் புராணம், இலிங்கோற் 36 கோயம்புத்துர் ஜில்லாவிலுள்ள பேரூர்" என்னுந் தலத்துக்கும் "ஆதிபுரி என்னும் பெயர் உண்டு.