உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலிதாயம்) திருப்புகழ் உரை 91 நெருங்கி எதிர்த்துவந்த சூரர்கள் அழிய ஆறு திருமுகத்துடன் விளங்கி, வலிய கிரவுஞ்சகிரி எழுகிரி இவை (துள்ளிட) பதைபதைத்து ԼDIT TT வேலாயுதத்தைச் செலுத்தினவனே! (சொல்லும்) பேர்பெற்ற முநிவர்கள் (பிருகு, வசிட்டன் முதலானோர்) தவஞ்செய்த வட திருமுல்லை வாயிலில் வந்தருள் சுத்தமான மேலான ஞானனே! தேவர்கள் பெருமாளே! (அல்லது..... வந்தருள் பெருமாளே சுத்த மேலான ஞானமுள்ள தேவர்கள் பெருமாளே! (ஞானகண்ணியிலுளாக = #F# ====== H எனையாள்வாப்) திருவலிதாயம். 689. வாசனை பொருந்திய மல்லிகை மலர் நிறைந்த கூந்தலையுடைய அழகிய (பொது மகளிர் மீதுள்ள) காமமயக்க நினைவுகொண்ட அடிநாயேன் அலைச்சல் உறாமல், (இரு நல்ல) நல்ல இரண்டாகும் உன்னுடைய திருவடிகளை விரும்பிப் போற்ற, தக்கதான கற்பு மனத்தை (பெருமை வாய்ந்த மனத்தை) அருள்புரிய மாட்டாயோ! கருநெல்லி போன்ற திருமேனியை உடைய திருமாலின் மருகனே! பெருமை பொருந்திய வள்ளியம்மையாரின் கணவனே! முருகேசனே! திருவலிதாயம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! விளக்கம் வாய்ந்த மகா தவசிகளின் பெருமாளே! (இனவல்ல மானமன தருளாயோ)