உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை துன்னியெதிர் சூரர் மங்கிட சண்முகமTதாகி வன்கிரி துள்ளிடவெ லாயு தந்தனை விடுவோனே.

  • சொல்லுமுனி வோர் தவம்புரி

முல்லைவட வாயில் வந்தருள் துல்யபர ஞான வும்பர்கள் பெருமாளே.(3) திருவலிதாயம். (இந்த ஸ்தலம் பாடியென வழங்கிவருகின்றது. இது சென்னைப் பட்டினத்துக்கு மேற்கேயுள்ள வில்லிவாக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்மேற்கு 2-மைல் குறட்டுர் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கு 1/2 மைல் திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய தேவாரம் பெற்றது. ஸ்தல மான்மியம் உளது.) 689. அடிபேண தனதய்ய தானதன தனதான மருமல்லி யார்குழலின் மடமாதர். மருளுள்ளி நாயடிய னலையாமல்; இருநல்ல வாகுமுன தடிபேன. fஇனவல்ல மானமன தருளாயோ, # கருநெல்லி மேனியரி மருகோனே. கனவள்ளி யார்கணவ முருகேசா; திருவல்லி தாயமதி லுறைவோனே. திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.

  • பிருகு வசிட்டர், துருவாசர் - பூசித்த தலம் வசிட்டர் பூசித்துக் காமதேனுவைப் பெற்றார். (திருமுல்லைவாயிற் புராணம்)

t'இனமானவை அறியேனே' என்றார் 686 ஆம் பாடலில், #கருசெல்லிமேனி என்றும் பாடம் திருமாலின் நிறம் கறுப்பு. நீலம், பச்சை என்ப. கார் மலர்ப்பூவை, கடலை யிருள். மணி அவையைந்து உறழு மணிகிளர் மேனியை" - பரிபாடல் 13.42.