உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிருமுல்லைவாயில் திருப்புகழ் உரை 89 688. மின்னல்போல உள்ள இடையில் (கலாபம்) கலாபமும், இடையணியும், தொங்கல் - புடைவை முந்தானையும் விளங்க, அன்னமும், மயி லும் நாணம் அடையும்படி (சாயலும்) நடையழகும், அவைகளின் மேற்பட்டு விளங்குவனவான மாதர் கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெள்ள உலாவி இன்பகரமான சொற்களைக் குயில்போலப் பேசிக் குலவி நட்பு பாராட்டி வில்லைப் போன்ற புருவமும், கண் (கணை) அம்பு போலவும் கொண்டு மோக கன்னியர்கள் போல இன்பநலம் பெறுகின்ற மின்னல்போல ஒளிவீசும் அணிகலன்களையும், (கல்லாரம்) செங்கழுநீர் மாலையையும் பூண்டுள்ள கொங்கையர்களாம் பொது மாதர்களுடைய (கண்ணியில்) வலையில் (நான்) விழாமல் அன்புகூர்ந்து ஞானபதமான (ஞான நிலையதான) வலையினுள் அகப்படும்படி (உனது) சுந்தர - அழகிய (பொன்னியல்) பொலிவு நிறைந்த (பதாரமும்) பாதார விந்தத்தையும் (கொடு) கொடுத்து, (கண்ணுறு) கண்திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை ஆண்டருளுக. சிரசில்... உலவித்திரியும் இளம்பிறையையும் வன்னியையும் பாம்பையும், கொன்றையையும் கொண்டவர், சிவந்த (ம்னிகள்) நாகரத்னங்கள் விளங்கும் எந்தை சிவபெருமானுடைய ர்த்தியே! (ரத்தத்தால்) செந்நிறங்காட்டிய இராவணனுடைய தலை காவீதிதிேத்து :: j?'ಧಿ 蠶 தெய்விக பொன்மயச் சக்கர்த்தை யேந்திய அழகிய திருக் கையனாகிய திருமாலின் மருகனே! "அயன்படை யாண்டகைச் சக்கரப்படையோடுந் தழிஇச் சென்று" "புக்கோடி யுயிர்பருகிப் புறம்போயிற் றிராகவன்தன் புனித வாளி" "குருதி பொங்கத் தேர் நின்று நெடுநிலத்துச் சிரமுங் கீழ்ப்பட விழுந்தான் சிகரம் போல்வான்" - கம்ப ராமாயணம் - ராவணன் வதை 197, 198, 200.