பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 99 தகுர்த தகுர் ததிகு. தரர ரரரரிரி தகுர் தாத என்று. (எமர) - முருகனடியாராகிய எம்மவர்க்கு வேண்டியதும், நடனவகைகள் கொண்டுள்ளதுமான மயிலின் முதுகிலே வருகின்ற (இமயராஜன் மகள்) - பார்வதி குமரனே! எங்கள் ஈசனே! இயற்றமிழ் விளங்கும் (அல்லது தகுதி வாய்ந்துள்ள) மயிலாப்பூர் என்னும் நகரிலே இன்பமுடன் வீற்றிருக்கும் எங்கள் மேலான குருமூர்த்தியே! பெருமாளே! (நினது பதவிதர வருவாயே) 693. வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும் அமுதத்துக்கு ஒப்பான அருமைப் பேச்சாலும் மலைக்கு இணையாக எழுந்துள்ள இரண்டு கொங்கைகளாலும் (வாழ்க்கை) தடையுண்டு அடியேனும் இறப்பேனோ! கயிலைப் பதியில் வீற்றிருக்கும் சிவபிரானது குழந்தையே! கடலினுடைய கரையும் அலையும் சமீபத்திற்குழ்ந்துள்ள மயிலைநகரில் வீற்றிருப்பவனே! பெருமை பொருந்திய அடியவர் பெருமாளே! (அல்லது - உன் பெருமைக்கு அடியவர் யாரோ அவர்தம் பெருமாளே!) (தடையுற் றடியனு மடிவேனோ) 694. தருமமே இல்லாத மிக்க பாவகரமான வஞ்சனை கொண்ட செயல்களாலே - அடியவனாகிய நான் (மெலிவு) தளர்ச்சியுற்று, மனம் கொஞ்சமும் சோர்வு அடையாமல் -