உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 -- முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற கனலெனவு லாவு வட்ட மதியாலும், வளமையணி நீடு புஷ்ப சயன அணை மீது ருக்கி வனிதைtமடல் நாடி நித்த நலியாதே. வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி மலரணையில் நீய னைக்க வரவேனும்: துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப துயில தர ணாத ரித்த மருகோனே. # சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர துரகதக லாப பச்சை மயில்வீரா,

  • உருக்கி உருகி.

f மடல் . மடலேறுதல் - பாடல் 668, பக்கம் - 32 பார்க்க கடவுள் சம்பந்தமாக மட்டும் பெண்பாலார் மடலேறுதல் கூறப்படும்: மானோக்கின் - அன்ன நடையார் அலர்ஏச ஆடவர்மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டறிவதுண்டு - அதனையாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் - வேண்டாதார் "உம்பர்வாய்த் - துன்னும் மதியுகுத்த தூநிலா நீள் நெருப்பில் தம்முடலம் வேவத் தளராதார் - காமவேள் மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய பொன்னெடு வீதி புகாதார்" - எனவரும் இயற்பா - பெரிய திருமடல்" இந்தப் பாடலுக்கு விளக்கம் தருகின்றது. "காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்" - தொல் புறத்திணை 28 என்பதன் கீழ் - கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மாநுடப் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மாநுடப் பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம், - எனவரும் உரையைக் காண்க. புறநானுாறு 83, நெய்தற்கலி 25, 30 செய்யுள் உரைகளையும் காண்க. இந்தப் பாடல் (697) கடவுள் மாட்டு மாநுடப்பெண் நயப்பது கூறிற்று 1020 ஆம் பாடல் மாநுடப் பெண்மாட்டு கடவுள் நயப்பது கூறுகின்றது. f "சுருதிமறை" - சுருதி - வேதம் மறை உபநிடதம் எனக் கொள்ளலாம். வேதத்து மறைநீ" - எனவரும் பரிபாடலின் (3.66) உரை

    • TçT.F.TößF,