பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 111 பரப்புள்ள கடலில் நீர் மோதவும், அசுரர்கள் இறக்கவும், வானுளோர் நாடு (பொன்னுலகம்) செழிப்புள்ள நகரமாகவும், வேலாயுதத்தைச் செலுத்தின மயில் வீரனே! அழகுடன் வளர்ந்து ஆகாயம்வரை வளர்ந்து விளங்கும் பலாமரங்களின் பெரிய சோலையும், தாமரைக் குளமும், நீர்ப்பூக்கள் உள்ள ஓடைகளும், வயல்களும், அழகுள்ள மாடங்களும், சிறந்த மாடங்களின் சிகரங்களும் ஒன்றுகூடி அழகு விளங்கும் மயிலாப்பூரில் வீற்றிருந்து வாழ்கின்ற தேவர் பெருமாளே! (நேர்காண வருவாயே) 699. திரைகள் கொண்ட நீண்ட கடலாற் சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு (திரிவேன் உனை ஒதுதல் திகழாமே) உனை ஒதுதல் திகழாமே திரிவேன் - உன்னை ஒதிப் புகழ்தல் இல்லாது திரிகின்றேன்; (இனி) (தினநாளும்) நாள்தோறும் முனேதுதி மனது ஆர முன்னதாகத் துதிக்கும் மனநிலை நிரம்பப்பெற்று - பின்னே - (அப்படிப்பட்ட மனம் வாய்ந்த பின்னர்) சிவ குமரனே! மும்மூர்த்திகளின் தலைவனே! பெரிய (இமய மலை மாது - உமையாள் பெற்ற மணியே! குகனே என்று (அறையா) ஓதி அடியேனும் உன்னுடைய அடியாராய் வழிபாடு செய்பவர்களோடு அருளன்பு கூடியவனாகின்ற (மகாநாள்) விசேடநாள் ஒன்று உண்டோ - (மேற்கூறியவாறு) உன் நாமங்களைச் சொல்ல் அருள் புரிவாயாக. தலைமைபூண்ட வெள்ளையானை - ஐராவதத்துக்குரிய தேவனாம் இந்திரனும், (பிற) தேவர்கள் யாவரும் இழிவான நிலைமையை அடைந்து - முன்பு, தமது தகுதியை இழந்தவர்களாகி. (இருளாம் மனதே உற) மயக்க இருள்கொண்ட மனங்கொண்டவராக, அசுரத் தலைவர்கள் நிரம்ப இடர் துன்பச் செயல்களைச் செய்துவர, அந்தத் தேவர்களின் துன்பம் நீங்க