உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசை நகர்) திருப்புகழ் உரை 121 கோசை நகர் 703. விருப்பந் தருவதான கனம் கொங்கை, (மாதர் அழகுள்ள இடை நூல், வயிறு ஆலிலை, (எனா) என்று உவமை கூறி, காம சாத்திர விளையாடல்கள். எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணம் அதில் (அல்குலில்) ஆசை மிகவும் கொண்டு, அடியேன் அலைச்சல் உறாமல், (நாதனே!) (அல்லது ஒலியுடன்) நூறுகோடி (மறைகள்) ஆகம மந்திர உபதேசப் பொருள்களைச் சத்தத்தால் தெரிவிக்கும் (உனது) சிலம்பு முன்னதாக விளங்கும் திருவடியாம் அழகிய மலரை நன்மை பெறுமாறு நான் நாள்தோறும் நிதமும் நினைக்கும்படி உனது கிருபையை நாடி (அங்ங்ணம் நாடுவதால்) உனது திருவருளை நீ (அருள்) பாலிக்க வரவேண்டுகின்றேன். குளிர்ந்த நிலவு, ஆடும் அரவு, குறுவேர், அறுகு (அல்லது) ஏர் அறுகு-அழகிய அறுகு, நிறம் உள்ள (கொக்கின்) இறகு, குளிர்ந்த (கங்கை) நீர், இவைதமைக் கொண்ட அழகிய சடையை உடைய பரமேசர். (உலகங்கள்) செம்மை பெறவே தந்த கூரிய வேலனே! சிவனே! கோபித்து வரும் பெரிய அசுரர்களின் குலத்துக்கு யமனே! பெண்ணினல்லவளான குறமாது (வள்ளி) நற்குணம் உள்ள தேவ அழகிய மாது தேவசேனை ஆக இருவரும் இரண்டு பக்கத்திலும் பொருந்த விளக்கத் துடன் வரும் குமரேசனே! கோசை நகரில் வீற்றிருக்க வந்துள்ள ஈசனே! அடியார்க்கு நேசனே! சர்வேசனே! முருகா! தேவர் பெருமாளே! (அருள வருவாயே)