உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடம்பக்கம்) திருப்புகழ் உரை 127 ஒளி பொருந்திய வேலாயுதத்தாலே, சண்டை செய்த சூரனை அழித்தருளின வீரனே! அழகிய மயிலில் ஏறும் கந்தனே! வினோதனே! நீ சொல்லுக’ என்று கேட்ட சிவபிரானது முன்னிலையில். வாக்கால் தோற்றுவிக்க முடியாததான ஞான சுகத்தைப் பிறப்பிப்பதான பொருளை உபதேசஞ் செய்த தேசிகமூர்த்தியே (குருமூர்த்தியே): மாடம்பாக்கம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் செல்வமே தேவர்கள் பெருமாளே! (ஆள்வது கருதாயோ) 706. விலைபேசி முடிவுசெய்யவும், கொங்கையை (ஆடையால்) மறைக்கவும் நறுமணம் நிறைந்துள்ள செழுமை கொண்ட பூ மாலையை அணிந்துள்ள மேகம்போன்ற (கரிய) கூந்தலை அவிழ்த்து விடவும், விஷம், (கஞ்சம்) தாமரை, (சரம்) அம்பு இவைகளுக்கு நிகரான கண்கொண்டு (ஆடவர்களை) வெருட்டவும், சொன்ன சொல்லைப் புரட்டிப் பேசவும் - மாற்றிப் பேசவும், மாமிசம், (துன்றும் சலம்பாப் உதிர நீருடனே) நிரம்பிய ஜலமும், பாய்கின்ற ரத்த நீருடன் (ரத்தத்துடனே) (அல்லது) நெருங்கிச் (சலம்) சுழற்சியுடன் பாய்கின்ற ரத்த நீருடனே. வெளியிலே வந்து நிற்கவும், வலிய (வேண்டுமென்றே) (முட்டரை) மூடராயுள்ளோரை எதிர்ப்பட்டு அவர்களுடன் பேசியும்) அவர்களைப் பின் தொடர்ந்தும், வெற்றிலை, சுண்ணாம்பு, துாள்பாக்கு) இவைதமை எடுத்துக்கொடுத்து, (நீங்கள்) இடையிலே (அப்படியே) நமது வீட்டுக்குத் திரும்பி வரும் நற்குணத்தவர் அன்றோ' (என உரைத்து) என்று நன்மொழி பேசி (அவர்தமை) அவர்களை (வரப்பண்ணி) தமது வீட்டுக்கு வரச் செய்து (உடன்கொண்டு) தம்முடனே அழைத்துச் சென்று அன்புடன் போய் உறங்கும் படுக்கையின் மேலே