உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடம்பக்கம்) திருப்புகழ் உரை 131 (செரு இடத்து) போர்க்களத்திலே பேய்கள் தெனத் தென தெனந்தெந் தெந்தெனந்தா எனக் கூறிக் குதித்தாட இடக்கைகள் (இடக் கையாற் கொட்டப்படும் வாத்தியங்கள் - பெரு முரசு வகை), மணிகளும், கணப்பறை (பறைவகை அதமக்கருவிகளும் டிகுண்டிங் குண்டி குண்டா ... குண்டி குண்டீ என ஒலிக்க, இராவணனுடைய பெரிய மலைபோல விளங்கின தலைகள் பத்தையும், இரண்டு அஞ்சு (10) ஒன்பது (9) + (1) சேர்ந்த இருபது பெரிய புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியும்படி கோபித்து ஒரு அம்பை எறிந்தவனாகிய திருமாலின் பிள்ளை (பிரமனுக்கு அல்லது மன்மதனுக்கு) மைத்துன முறையினனே! அசுரர்களுடைய குடலை வெளிப்படுத்தி அவர்களுடைய உடலைப் பிளந்து மயில்மேல் வந்தவனே! வயல்களிற் கயல்மீன் கூட்டங்கள் மிக்கு எழுந்து வரம்பினிடத்தே புரண்டு பெருகும் பக்கங்களிலே சங்குகள் சொரிகின்ற முத்துக்கள் நிறைந்து, எங்கும் விளக்கம் தரும் (வரிசை பெற்றும் மேம்பாட்டினைப் பெற்று, விளங்கும் (தமனியப்பதி) மாடம்பாக்கம் என்னும் தலத்தை இடமாகக் கொண்டு இன்புறுகின்ற மேன்மை மிக்க (இளைய நாயகனே) இளமை வாய்ந்த தலைவனே! (பெரும் பாதகனை ஆளுவையோ) (130ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) t வேதா மைத்துன வேளே" - திருப்புகழ் 823 "காமவேள் மைத்துனப் பெருமாளே." - திருப்-1108, 1109

  1. கொடுகோடு-சங்கு

x தமனியப்பதி என்பது மாடம்பாக்கம். தமனியம் மாடு - பொன். திரு அன்னியூர் என்னும் தேவாரம் பெற்ற தலம் - திருநீடுர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு 3 மைலில் உள்ளது. பொன்னூர் என வழங்குகின்றது.