பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகர்) திருப்புகழ் உரை 135 ஒன்று கூடி வந்த சூரர்களுடைய மார்பை இரண்டு கூறாகக் கண்ட பெருமாளே! கோடை நகரில் வாழ்ந்திருக்கும் பெருமாளே! (பூவடிகள் சேர அன்பு தருவாயே) 708. மிகவும் நீண்ட நாள்கள் ஒரு பெண்ணின் (கருவிலே) உடலிலே (கிடந்து) அலைச்சலுற்று, (பின்பு) சாவும் அளவுக்குள்ள துன்பத்துக்கு ஆளாகி வந்து பூமியிலே (சாதகமும் ஆன பின்பு) பிறப்பு என்பதை அடைந்த பின்னர், பலமாக அழுது, கிடந்து, தரையிலே தவழ்ந்து விளையாடிப் (பின்பு) பால உருவினனாய்ப் பேச்சுக்கள் பேசிச் சர்க்கரை போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெருத்த கொங்கைமீது அணைந்து, பொருள்தேட வேண்டி பூமியிலே திரிந்து (ஈற்றில்) பாழான நரகத்திற்போய்ச் சேராமல், பொருந்திய (உனது) திருவடி மலரைச் சேர்வதற்குரிய அன்பைத் தந்தருளுக. விஷத்தை அமுதமாக உண்ட கங்கையாற்றைச் சடையிற் சூடியுள்ள நாதர், சந்திரனையும், படமெடுத்தாடும் பாம்பையும் பூண்டுள்ளவர் - (ஆன சிவபிரான்) தந்த முருகனே! (ஆனை) கஜேந்திரனால் (அன்று) மடுவிடத்தே ஆதி முலமே' என்றும் நீயே தஞ்சம்", என்றும் கூவி அழைக்கப்பட்ட ஆதி முதல்வனான நாராயணமூர்த்தியின் மருகனே!

  1. சிவபிரான் ஆலம் உண்டது - பாடல் 509 பக்கம் 162 பார்க்க

X ஆனை அழைக்கத் திருமால் வந்து உதவினது பாடல் 110. பக்கம் 262 பார்க்க