உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்போசூர்) திருப்புகழ் உரை 149 அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், அழகு நிறைந்த கோபுரங்களும், அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும். ஆக நீடிய அழகுகள் வாய்ந்த திருப்போரூரில் உறைகின்ற தேவனே!தேவர்கள் பெருமாளே! (மாதர்கள்மேல் ஆசாவிட அருள்வாயே) 715. உருக்கி எடுத்த (அல்லது உருக்கு - எஃகாலாகிய) அம்பு போன்ற கண்கள், மலை போன்று நிறைந்து பெருத்த (கச்சு அணிந்த) கொங்கைகள், உகப்பு (மகிழ்ச்சி) ஆர் - நிரம்பும் நிரம்புத் தரும் (வால சந்திரன்) இளம்பிறை ஒத்த (நுதல்) நெற்றி, நூல் போன்ற உரு அமைந்த நீண்ட இடை, பெரிய (அல்லது மூங்கில் அனைய) தோள், (ஒதி கொண்டல்) கொண்டல் - மேகம் போன்ற, ஒதி - கூந்தல் - இவைகளின்மேல் (உவப்பா) உவப்பாக மகிழ்ச்சியாக (விரும்பி), மேல் விழுந்து - (மாதர்) மேல் விழுந்து திரிகின்றவர்களை. (அருக்கா) விரும்பாத அல்லது அசட்டை பண்ணுகின்ற பொது மாதர்களின் இருப்பிடத்துக்கே (அல்லது மலையன்ன் கொங்கையை விரும்பியே) அந்த காமசுக வலைக்கே பூண்ட மனத்தினன், ஃேகிம் நான் (எனது) அசட்டுத் தனத்தால் மூடுகின்ற (மசக்கால்) மனந் தடுமாறுதலால் மழுங்கும் இந்த (அவத்தால்) கேட்டினால் நான் (சனம்) இழிவு அடையாதவாறு அருள்புரிவாயாக எருக்கு (ஆர்) ஆத்தி (தாளி) அறுகு, தும்பை, வாசனை பொருந்திய மலர்கள், கங்கையாறு இவைத்மைச் சூடியுள்ள ஆதி, நம்பர் - ஆகிய சிவபிரானது புதல்வனே! இருக்கு என்னும் மறையால் (வேத மந்திரத்தால்) நினைத்து (அல்ல இருகால் - இரண்டு திருவடிகளையே நினைந்து) போற்றி செய்வோருட்ைய நாவிலும் ெ த்சிலும் இருப்பவனே! தேவசேனை அணையும் அ ழகிய ಜಿ. ஆணவத்தால் மிக்கெழுந்த (கடற்சூரன்) கடலில் மாமரமாய் நின்ற சூரன் அழிய வென்ற வெற்றி வாய்ந்த வேலாயுதத்தைக் கையிற்கொண்ட முருகனே!