பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/724

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுராந்தகம்) திருப்புகழ் உரை 165 மதுராந்தகம். 722. குதித்துப் பாய்ந்து ரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், (தொக்கு) தோலொடு கூடியதும், (இந்திரியம்) ஐம் பொறிகளுடன் கூடியதுமான (குரம்பை) - உடல்; வினை மிகுந்து (தூர்) நிரம்பியுள்ள (குணபாண்டம்) குணங்களுக்கு கொள்கலமான உடம்பு - இதனை (உற்று) அடைந்து அகிலமெனக் கைக்கொண்டு - இந்த உடம்பே (உடம்பைப் போற்றுதலே) எல்லாம் - சகல செல்வமாம் என மேற்கொண்டு - அதனால் இளைத்துச் சோர்வுற்றுத் திரியாமல். (போற்றித் துதிக்க மனத்தில்) உதிக்கின்றதாகும் (பரத்தை) பரம்பொருளை, (உயிர்கெட) ன்மத்துவம் நீங்க, அழகிய கிண்கிணி, சதங்கை இவை விதம் விதமாக கீதங்களைச் செய்யும், (உபய அம்புய) இரண்டு தாமரையன்ன (உனது) திருவடிகளாம் (புணையை) தெப்பத்தை - இனியேனும் பற்றி உய்யும் கருத்தை (எனக்கு) எப்போது தருவாய்! கதை, சாரங்கம், வாள், சங்கு, வலிமை வாய்ந்த சக்கரம் எனப்படும் பஞ்சாயுதங்களைத் தரித்துள்ள மேக நிறத்துத் திருமாலின் மருகனே! கருணையும் (அஞ்சனம்) மையும் கொண்ட தாமரை யனைய கண்களைக் கொண்ட அழகிய பசிய தினைப். புனத்திருந்த கரும்புபோல இனித்த வள்ளியின் மணவாளனே! மன்மதனுக்கு யமனாயிருந்த (மன்மதனை எரித்தழித்த) சிவபிரானுக்குக் குழந்தையாகத் தாமரையிற் பிறந்து விளங்கின குமரேசனே! மதுராந்தகத்தில் வட திருச்சிற்றம்பலத்தில் அமர்ந்து விளங்கும் பெருமாளே! (உபயாம்புயப் புணையைப் பற்றுங் கருத்தைத் தருவாயே)