உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 723. உபதேசம்பெற தனதாந்த தத்த தனண தத்தத் தந்த தத்த தந்த தனதான சயிலாங்க னைக்கு ருகி'யி டப்பக் கங்கொ டுத்த கம்பர் வெகுசாரி. சதிதாண்ட வத்தர் சடையிடத்துக் கங்கை வைத்த நம்பர் உரைமாளச்; செயல்மாண்டு சித்த மவிழ நித்தத் த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசஞ்: சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்iகு ருத்து வங்கு றையுமோதான்; அயில்வாங்கி யெற்றி யுத்தி யிற்கொக் கன்ற னைப்பி ளந்து சுரர்வாழ. # அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற் றுந்தி றற்ப்ர சண்ட முழுநீல மயில்தாண்ட விட்டு Xமுதுகு லப்பொற் குன்றி டித்த சங்க்ர மவிநோதா. மதுராந்த கத்து வடதி ருச்சிற் றம்ப லத்த மர்ந்த பெருமாளே.(2) † பார்வதி சிவனது இடது பாகத்தைப் பெற்றது. பாடல் 301 பக்கம்-246. பாடல் 548 பக்கம் 248 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க f குருத்துவம் குறையுமோதான் - என முருகவேளை வினவுதல் அவரொடு "அசதியாடுதல்" ஆகும். அசதியாடுதல் - பரிகசித்தல். 4 சூரனைச் சங்களித்த பின் மயில்மீது அகிலாண்டங்களைச் சுற்றினது. பாடல் 267 பக்கம் 161 கீழ்க்குறிப்பு + பார்க்க X மேருவைச் செண்டா லடித்தது - திருப்புகழ் - 2, பக்கம் 23 கீழ்க்குறிப்பு. பொற்குன்று கிரெளஞ்சம் எனவும் கொள்ளலாம். சொன்ன (சொர்ண) கிரெளஞ்சகிரி" . கந்தரலங்காரம் 19: கனகிரெளஞ்சம் திருப்புகழ் 454. குருகு பெயர் பெற்ற கனவ சிகரி. வேடிச்சி காவலன் வகுப்பு (கனம் - பொன்)