உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேயூர்) திருப்புகழ் உரை 173 725. மேகம் என்று சொல்லும்படியான நீண்ட கூந்தலை உடையவர்கள், வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்கள், கயல்மீன் போன்ற வேலைப் போன்ற கண்களை உடையவர்கள், (சசி) சந்திரன் போன்ற (முகவார்) முகத்தை உடையவர்கள், தரளாம் எனவே தரளம் - முத்துப் போலவே பற்களைக் கொண்டு சிரிக்கின்றவர்களாகிய மாதர்கள்; கொங்கைகள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்கள் என்று சொல்லும்படி விளங்க, (அவைகளின் மேலே) வடம் - மணிவட, மாலைகள் (ஆடிடவே) அசைந்து விளங்கக் கொடிபோலவும், நூல் பேர்லவும், நுண்ணிய இடையில், (முது) வேலைப்பாடு முற்றின, (பாளிதசேலை) பட்டுப்புடைவை விளங்கவுள்ள மயிலனைய மாதர்கள் பாம்பு போன்ற அல்குலை உடையவர்கள், வாழை போன்ற தொடை அழகினர்கள், கழல் - சிலம்பு (அல்லது கால் மோதிரம்) ஒலிக்கப் பொருந்திய அழகினர்கள், (கனம்) பொன்னாலாய நூபுரம் (பாத கிங்கிணி) ஒலிசெய நடந்து சென்று அன்னப்பறவை என்னும்படி யாரையும் விருப்பம் (மோகம்) கொள்ளும்படி கண் கொண்டே சுழல விடுகின்ற பாவையர் - இத்தகையோரது படுக்கையிலே அடியேன் உடல் அழிபடுவேனோ! விண்ணுலகிலுள்ள ஊரினர்கள் (தேவர்கள்) கோ என்று முறையிட இருளைப்போலக் கரிய நிறம் உடைய அசுரர் படைகள் துள்ளாக, கடலும், எழுகிரியும், (நாகமும்) (பிற) மலைகளும் தூளாகச் செலுத்தின வேலாயுதனே! தாமரையில் கோயில் கொண்டிருக்கும் நாயகி, தேவர்கள் தொழுகின்ற ஈசனுடைய இடது பாகத்தில் உள்ளவள். கருணைக்கு இருப்பிடமானவள், ஞான பரதேவதை ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே!