உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேறநகர்) திருப்புகழ் உரை 175 டிகிழமரம், (மாலதி) மல்லிகை, நாவல்மரம், பலாமரம், (கமுகு) பாக்குமரம், இவைகளில் விளையாடும் (நிலா) ஒளி பொருந்திய மயிலும், குயிலும் மகிழ்ந்திருக்கும் பிரதேசமாகிய வள்ளிமலையில் இருந்த பெருமை தங்கிய வள்ளி நாயகியின் மணவாளனே! சந்திரனைப் போன்ற அழகிய முகத்தனே! அடியேனுடைய இருவினையும் து.ாளாகவே வேலை உபயோகித்த பெருமாளே! வளவாபுரி எனப் பெயரிய சேயூரில் (செய்யூரில்) வீற்றிருக்கும் பெருமாளே! மயில் வாகனப் பெருமாளே! (அடியேன் உடல் அழிவேனோ) பேறை நகர். 726. இப் பாடலின் உரையைத் தொகுதி 2:பாடல் 327.1 பக்கம் 317பார்க்க (பக்கம் 174 கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) x வளவாபுரி என்பது சேயூர், இதனைச் சேயூர் முருகன் பிள்ளை தமிழிற் காண்க O மதுராபுரி மேவி யுலாவிய பெருமாளே என்றும் பாடம். வளவநகர் - வளவாபுரி - இவை சேயூரைக் குறிக்கும். சோழனுடைய நகரம் என்பது பொருள். செம்பிய வளவன் வந்துணக் காலயம் சகலமும் தந்ததிற் பின்". தெரிதமிழ் வளவ ணகரியின் முருக" திருமகள்மருக! வருகவே! சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்.