உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவக்கரிை திருப்புகழ் உரை 179 728. பச்சிலைப்பொடி பூசி முகத்தை மினுக்குபவர்கள், வஞ்சகமான வித்தைகளில் மிக்க சாமர்த்திய சாலிகள், (பப்பர மட்டைகள்) கூத்தாடும் பயனிலிகள், (வருபவர்தம்) கைப்பொருளை அபகரிப்பதிலேயே எண்ணம் வைத்துள்ள. வர்கள். (பத்தி நிரை) வரிசை வரிசையாக உள்ள (தவள) வெள்ளை நிறத்து (தரளத்தினை) முத்துக்களை ஒத்த பற்களாலும், கண் பார்வையாலும் மயக்குபவர்கள், அன்பு மிகும்படி மா, பலா, வாழை என்னும் முப்பழங்களையும், சர்க்கரையையும் போன்ற) வாயிதழ் ஊறலாம். எச்சிலைத் தருபவர்கள், (கச்சு அணி மெத்தையில்) கச்சைக் கயிற்றாலாய அழகிய மெத்தையில் - கயிற்றுக் (கட்டிற்) படுக்கையில் (இச்சகம்) முகஸ்துதியான வார்த்தைகள் நிரம்பப்பேசி (நயத்தொடும்) பக்குவமாக (எத்தி) ஏமாற்றி. வஞ்சித்து அழைத்து, அணைத்து மயக்குபவர்கள் ஆகிய அழகிய (பொது) மாதர்களின் மேலுள்ள. ஆசையிலேயே இவ்வண்ணம் தினந்தோறும் மனவருத்தத்தை அடைந்து, உலகோர்கள் சீ சீ என வெறுப்புக்காட்டத் திரிகின்ற (எனது இந்தத் தொழிலும், எனது இந்தக் குணமும் நான் விட்டொழிக்க (உனது) நல்ல திருவடியைத் தந்தருளுக விஷமுள்ள (அரவம்) ஆதிசேடனாம் பாம்பின்மேல் துயில்கின்ற பச்சை மேகம் போன்றவரும், கருணைக் கடலானவரும், தாமரைமலரில் வாசம் செய்யும் இலக்குமியைச் சேர்பவரும், சங்கு தரித்த கரத்தினரும், திருத்துளப மாலையை அணிந்துள்ள மார்பினரும், நட்டநடுக்கடலில் - கடலில் நடுமத்தியில் பெரிய (மந்தர) மலையை நாட்டி (அரவப்பணி) பாம்பை (வாசுகிப் பாம்பைக் கயிறாகச்) சுற்றி (மதித்து) மர்த்தித்து கடைந்து, உளம் நத்து அமுதத்தை உள்ளத்தில் மனத்தில் ஆசைப்பட்ட அமுதத்தை வரப்பண்ணித் தேவர்களுக்கு அளித்தவருமான திருமாலின் மருகனே!