பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 67 471. அன்றன்று வேண்டிய உணவைத் தேடிபொருளிலும் ஆசை கொண்டு தவியாத பற்றை (பற்றுக்கோடு ஒன்றை)ப் பெறுவேனோ! வெற்றியே விளங்கும் ஜோதி வேலனே! (கிரவுஞ்ச மலையைத் தொலைத்த பரிசுத்தனே! கற்றுத் தியானித்து உணரப்படும் ஞான சொரூபனே. கச்சி (காஞ்சி)யிற் பெருமாளே! (ஆசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ) 472. சங்கடப்பட்டு - (தேவ, மனித நரக, விலங்கு என்னும்) நாற்கதிகளிலும் (கதி ஒவ்வொன்றிலும்) முழுமையும் அலைந்து பல நாளும், (தடைபட்டு) தடுமாறுதல் அடைந்து சுழல்கின்ற என்னைக், கொஞ்சம் (கவனித்து) ஏன்று (ஆண்டு) கொள்ள நினைத்தலாகாதோ (நினைத்தருளுக என்றபடி) வட்டமாகிய இருதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூசிக்கத் தக்க அழகிய திருவடிகளை உடையவனே! துன்பப்படும் (அற்றம்) சமயத்தில் அருள்புரிபவனே! கச்சியில் (வீற்றிருக்கும்) அழகிய பெருமாளே! (சற்றுப் பற்றக் கருதாதோ)