பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 4.73 . திருவடியைப் பெற தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதான அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் தருவோர் தாள். அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் பிறவாதே; செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைச் கழல்தாராய், துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்

  • துட்கத் திட்கப் பொரும்வேலா! சுத்தப் பத்திச் சித்ரச் + சொர்க்கச்

சொர்க்கத் தத்தைக் கினியோனே, xகற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் களைவோனே. oகற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் பெருமாளே (23)

  • துட்க வெருவ: பயப்பட

t திட்க திடுக்கிட,

சொர்க்கம் - கொங்கை குறவர் பாவை சொர்க்கத்தின் மேளகர்" . செந் துர் பிள்ளைத் தமிழ்-10

xகிரவுஞ்சன் என்னும் அரக்கனே அகத்தியர் இட்ட சாபத்தால் கிரவுஞ்சமலையாயினன். 'அன்றிலம்பேர் பெற்றுள்ள அவுணன்" வெய்யோய். நின்தொன்மை நீங்கி நீண்மலையாகி சண்டே நின்று. தித்தொழில் இழைத்தி" செவ்வேள் வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான்" கந்த புராணம் 2.241, 11,12 o கற்புச் சத்தி பொற்புச் சத்திசத்தி (பார்வதி) கற்பினொடு கொடுத்த சத்தி வேல்) உமைக்கணின்று தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த. நெடுவேலோய்" கல்லாடம் "பார்வதி சத்தியென்று தன் திருநாமஞ் சாத்தி - சூரனை வெல்லென்று கற்பித்தலுடனே கெடுப்ப விடுத்த. வேல்" (கல்லாட உரை). திருப்புகழ் 66 பக்கம் 158 கீழ்க்குறிப்பைப் பார்க்க