உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவை திருப்புகழ் உரை 181 திருந்தாப் பேச்சினளும், கரிய கண்களை உடையவளும், சிறிய இடையை உடையவளும், பெரிய கொங்கைகளை உடையவளும் ஆன குறவள்ளியின் மனத்தில் ஆசை கொண்ட (நிரம்பக்கொண்ட) குமரேசனே! இதழ்க் கொத்துக்கள் விரிகின்ற தாமரை மலர்ப் (பழனங்களும்) வயல்களும் - மருத நிலங்களும், குற்றமற) நன்றாக கடிகைப்புனல் - கடிகை என்னும் ஆற்றின் நீரும் சுற்றியுள்ள வளைந் துள்ள நல்ல திருவக்கரை என்னும் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே! (நற்பதம் அருள்வாயே) சிறுவை. 729. தேவர் தலைவனாம் இந்திரன் (தனது) பொன்னுலத்திற் குடியேறவும் நெருங்கி வந்த அசுரர்கள் உருமாறி இறக்கவும், தேவர்கள் மனத்தில் மகிழ்ச்சி அதிகமாகக் கொள்ளவும், அன்று காட்டின அந்த அருளோடு - அத்தகைய அருளோடு காளியுடன் ஆடின சங்கரன் மகிழ்ச்சி மிகக் கொள்ளவும் விநாயகரும் பார்வதியும் களிப்பு மிகக் கொள்ளவும், பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும், இந்திரனும், பிரமனும், எதிர் நின்று காணவும், (180 ஆம் பக்கம் தொடர்ச்சி) # கடிகை ஒரு ஆறு கொடுக்கூர் ஆறு' என வழங்குகின்றது கடிகை - வேகம்' எனவும் பொருள் கொள்ளலாம். X மகிழ்மீற அன்று வந்த அந்த அருள் போலவே இன்று மயிலுடனாடி (என்முன்) வரவேணும் எணமுடிக்க o மஞ்சிiன் இந்திரன்.