பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/744

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவை திருப்புகழ் உரை 185 730. குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; நாரத முநிவருடைய இசையில் (விநோதம்) மகிழ்ச்சி கொள்பவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், கோ ழிக் கொடியை உடையவனே! சிறந்த மயில்tது பிரியமுள்ளவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், வேதங்கள் தேடுகின்ற (சேகரமான) அழகான கீர்த்தியை உடையவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், ஆகமங்களின் சாரமே சொரூபமாகக் கொண்டவனே! உன்னை வணங்குகின்றேன் உன்னை வணங்குகின்றேன், தேவர்களின் சேனைக்கு (மகிபனே) அரசனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; (அடியார்கள்) நற்கதியை அடையும் ெ பாருட்டு (அவர்களுடைய) பாதகத்தைப்பிளந்து அழிக்கின்ற(குடார) கோடாலியே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; பெரிய அசுரர் தலைவர்கள் அஞ்சும்படியான (கடோரா) கொடுமை காட்ட வல்லவனே! உன்னை வணங்குகின்றேன்! வணங்குகின்றேன்; பூலோகத்தில் ஜயவீரனாய் விளங்குபவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; இமயமலைப் பெண் பார்வதிதேவி பெற்ற குழந்தையே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; வாக்கு வல்லமை உடையவனே! ஞான (மன - உலா) மனத்தில் உலாக் கொள்பவனே (உலவுகின்றவனே) உன்னை வண்ங்குகின்றேன், வணங்குகின்றேன்; பால குமார சுவாமியே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; உன து திருவருளைத் தந்தருளுக. (போதகம்) யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விநாயகருக்கு இளைய சகோதரன்ே! திருநீறு அணிந்த சடைப் பெருமான் சிவனுடைய அன்புக்கு உரியவனே! (அல்லது சடையர்களாம் முநிவர்களின் அன்பனே); ஒளிக்கு இடமானவனே (ஞான சூரியனே) இலக்குமியின் மருகனே! ஈசனே! கடலைப் பகைத்து (அது சுவற வேல்விட்ட) சூரனே!