உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை *பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத லனு ழன்று பொருநி சாச ரணைநி னைந்து வினை நாடிப். பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி `ಬ್ದಿ நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த முருகோனே, 1 சிறுவ ராகி யிருவ ரந்த கரிய தாதி கொடுபொ ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து சமராடிச். செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த சிறுவை மேவி வரமி குந்த பெருமாளே. (3) 732. இடர் அற தான தந்தன தானன தாணன தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன தனதான வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள் காத லின்பொருள் மேவின பாதகர் வீணில் விண்டுள நாடிய ருமைகள் விலைகூறி.

  • இங்கு கூறப்பட்ட சரித்திரம் இன்னதென்று நன்கு புலப்படவில்லை. ஆயினும் நக்கீரரின் வரலாறு ஒருவாறு பொருந்துகின்றது. நக்கீரரைக் குதிரை முகத்தைக் கொண்டிருந்த பென் பூதத்தினின்றும் முருகவேள் காத்தனர் என்று அருணகிரியார் கூறுவர்.

பாடல்கள் 91, 156 கீழ்க் குறிப்புக்களைப் பார்க்க (இங்கு பூதம் என்னாது நிசாசரன் என வருகின்றது) 1 அராமருடைய புதல்வர்கள் லவன் - குசன் என்பவர்கள் ஆசீராமரொடு பொருது ஜெயித்த ஸ்தானம் இந்தச் சிறுவாபுரி என்பது இத்தலத்து வரலாறு. சிறுவர்கள் அம்பெடுத்துச் செலுத்தி வெற்றி பெற்றதால் "சிறுவர் அம்பெடு" - சிறுவரம்பேடு (சின்னம்பேடு) என இத் தலத்தின் பெயர் வழங்குகின்றது.