உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவை திருப்புகழ் உரை 189 (பொறி) ம்பொறிகளும் (வழாத) வழுவாத வண்ணம் - தவறான స్క போகாதபடி காத்திருந்த (முநிவர்) நக்கீர முநிவர் (தங்கள்) தமது (நெறி) நித்ய அநுட்டான நெறியை (வழாத) தவறுதல் இல்லாத வழியில் நின்று காத்த (குகையில் அகப்பட்டு எப்போதும் போல சிவத்யானத்திலேயே இருந்த) பிலன் - குகையில், (உழன்று) மன அலைச்சலுற்று, பொரு நிசாசரனை - (குகையில் அகப்பட்டவர்களைப்) பொருது அழிக்க நினைந்திருந்த அரக்கனை ராகூசனை நினைந்து, வினை நாடி அந்த அரக்கனிடமிருந்து பிழைக்கும் செயலை நாடினவரான நக்கீரருக்கு (பொரு இலாமல்) ஒப்பில்லாத வகையில் (தனித்த அன்பு வழியில்) - அருள்புரிந்து - கிருபை கூர்ந்து, மயில்மேல் ஏறி ஒரு நொடிப்பொ ழுதில் வந்து (கற்சிறையினின்றும் அவரை மீட்டு) புளகம் மேவ - புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி பூத்து (தமிழ் புனைந்த திருமுருக்ாற்றுப்படை என்னும் தமிழ் மாலையை ஏற்றுப் புனைந்த அணிந்துகொண்ட முருகனே! சிறுவரான லவகுசர் என்னும் (ரீராமரின் புதல்வர்கள்) இருவரும் அந்த யானைப்படை காலாட்படை இவைகளைக் கொண்டு, போரிடையே சொல்லும் சொற்களுடன் வில் ஏந்திய பரீராமருடன் எதிர்த்துப் போர்செய்து வெற்றிகொண்ட நகரமான சிறுவை, குபேரனது அளகாபுரி போல வளப்பம் மிக்கதான சிறுவை (சிறுவாபுரி)யில் வீற்றிருந்து வரங்களை நிரம்பத்தரும் பெருமாளே! (நளினபாதம் என்று பெறுவேனோ) 732. வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட விழிகளை உடைய மாதர்கள், ஆசையுடனே பொருளை விரும்பும் பாதகத்தினர், (வந்தவருடன்) வீணாக (விண்டு) பகைத்து உள்ளத்தை ஆராய்பவர், (சில சமயத்தில்) ஊமைகள் போல இருப்பவர்கள் - விலைபேசி