பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாமாத்தூர்| திருப்புகழ் உரை 193 பொன்போல விளங்கும் கோபுரம், பெரிய மதில், தோழில், பல வீதிகளும் நிற்ைந்துள்ள அழகிய சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளிே (அடியேன் இடர் களைவாயே) திருவாமாத்துரர் 733. வலிமை வாய்ந்த கூரியவேல்கள், அம் புகள் இவைகளைக் காட்டிலும் (ஒடுதல்) ஒடிப்பாய்தல் அல்லது கலக்குதல் (நேர்படும்) நன்கு பயின்ற் க்ரிய கண்களாலும், (மால் எனும்) காம மயக்கம் எனப்பட்ட (மதவேழத்து) மதங்கொண்ட ஆனையின் - (அல்ல - மால்' எனத் திருமாலை அழைத்த மதவேழமாம் - கஜேந்திரனுடைய) (அளவிய) இடத்துள்ள (கலந்துள்ள) தந்தம் போன்றதும், வினையின் அளவே அளவாகக் கொண்டதுமான (வினை அளந்து தோன்றியதான) மிக்கெழுந்ததான கொங்கையாலும், அதன் (முகம்) தோற்றத்தை மூடி மறைக்கும் ஆடையின் அழகாலும் (துடி) உடுக்கை போன்ற இடையாலும், (வாலர்கள்) பாலிய வயதுள்ள ஆண் பிள்ளைகள் (துயர்வு) துயரம் _%/GNOL-Ш, (மாயமாய்) மாயவித்தையுடனும் ஒப்பற்ற தைரியத்துடனும் (ஊடும்) பிணங்குகின்ற (மாதர்கள்) பொது மகளிர்களையே துணையாகக் கொண்டு - (தொழுது) வணங்கி, (அவர் பாதம் ஒதி) அவர்தம் பாதங்களைப் புகழ்ந்து, (உன் வழி வழி யான் எனா) - உன்னுடைய பரம்பரை (மனிதன்) யான் என்று கூறி, (உயர்துலை) துலை (தொலைதுாரம்) வெகுதுாரம் - உயர் - உயர்ந்து எழுகின்ற (அல்லது துலை) ஏற்ற, மரம்போல உயர்ந்து எழுகின்ற (அலை). அலையிற்பட்ட, (மாறுபோல்) உலர்ந்த கொம்பு, குச்சு - மிலாறு) - போல, உயிர் அலைச்சல் உறுவேனோ! காட்டிலுள்ளே. இருந்த வேடர்களின் பெண்ணாம் வள்ளியுடன் (உன்) காதலைத் தெரிவித்துப் பேசும் பேச்சையும் அவளுடைய திருவடியைத் தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தையும் (அல்லது வாய்மையையும்) உடையவனே!