உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவமத்துர்) திருப்புகழ் உரை 195 அழகிய தோள் பன்னிரண்டு உடைய ஆறுமுகவேளே என்று உன்னை ஞானத்துடன் ஒதுகின்ற மகாத்வசிகளுக்குப் பெருஞ் செல்வமாயுள்ளவனே! ரிஷப வாகனத்தில் ஏறும் சிவ பிரான்மீது அன்பு மிகவும் உள்ளத்திற் கொண்டவர்கள் (சிவனடியார்கள்) (தமது) தீவினையானது (உக, நெடிது ஒட) சிதறுண்டு தூரத்தே விலகிஒட, (மேல்) தன்னிடத்தே (அணைபவர்) வந்து சேர்ந்து தரிசிப்பதான பழைய ஊராகிய (ஆமாத்துார் என்னும் தலத்தில்) நறுமணம் நிறைந்த மாதர்கள் (விரகுடன்) சாமர்த்தியத்துடன், (ஆடும்) நடனம் செய்யும் (மாதையில்) ಶ್ಗ என்னும் தலத்தில் வீரம் வாய்ந்த மயில்மீது ற்றிருக்கும் பெருமாளே! (மாதர்கள் துணையாக உயிர் சுழல்வேனோ) 734. கண்ணானது கயல்மீன், பெண்மான், இவைகளுக்குச் சம்பந்தம் கொண்டது எனவும், கரும்பு போன்ற தோள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் ஒப்பாகும் எனவும், மொட்டான - தாமரை போன் வளர்ந்து மிக்கெழுந்துள்ள அழகிய கொங்கைகள் யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பாகப் பொருந்தியுள்ளன எனவும், நிரம் மேம்பட்டு (மை) அஞ்சனத்துக்கு (அல்லது ங்கு) ஒப்பான கருமேகம் போன்றது கூந்தல் எனவும் வகளைக் கொண்டு பெருமை வாய்ந்த யமனே - பென்' என்னும் ஒரு உருவுக்கு உள்ள கோலாகலத்தை ஆடம்பரங்களை இன்று எடுத்து இளைஞர்களுடைய உயிர்களை (மன்) நன்றாகப் பிடிப்பதுபோல வந்துள்ள பெருமை வாய்ந்த அழகுள்ள மாதர்களின் (பின்பு) பிறகே செலவழியும் மகா மாயையில் (பெரு மோகத்தில்), அன்பை வைத் (நான்) அழிந்து போகாமல், அந்த ஆசையில் உள்ள ( ஞ்சில் அத்தனை) சிறிய ஒரு அளவுக்கு (உள்ள ஆசையை) (உனது) திருத்தாள்களை விரும்ப உனது திருவருளைத் தந்தருளுக.