பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/779

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அமர ராதிய ரிடர்பட அடர்தரு கெர்டிய தானவர் *திரிபுர மெரிசெய்த அதிகை மாநகர் மருவிய சசிமகள் திருவாமூர், (இது திருவதிகைக்குச் சமீபத்திலுள்ளது. பண்ணுருட்டியிலிருந்து 5-மைல். இது திருநாவுக்கரசு ஸ்வாமிகளுடைய தமக்கையாராகிய திலகவதியார் என்பவர் அவதரித்துச் சிவபுண்ணியஞ் செய்து புகழை வளர்ப்பதற்கு ஆதார ஸ்தானமாக இருந்ததலம்) 744. அகப்பொருள் பெருமாளே.(2) தான தனண தணத்தந் தனதான சீத மதிய மெறிக்குந் தழலாலே. சிறி மதனன் வளைக்குஞ் சிலையாலே, ஒத ம யலைக்குங் கடலாலே. ஊழி யிரவு தொலைக்கும் படியோதான்; fமாது புகழை வளர்க்குந் ருவாமூர்வாழு மயிலி லிருக்குங் குமரேசா; காத லடியர் கருத்தின் பெருவாழ்வே. t காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.

  • திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை

பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல், புரம் அதிகை" தேமன்னு கொன்றையுந் திங்களும் சூடிதன் சேவகமே" (தனிப்பாடல்) "முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழுந் திரிபுரந் தியெழ விற்றான் கொண்டெயில் எய்தவர் வீரட்டம் கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே" அப்பர் 5-33t மாது - திலகவதியார், அப்பர் சுவாமியின் தமக்கையார் தமது தமக்கையாரால் சைவ சமயத்திற்கு மீட்கப் பெற்றுச் சூலைநோய் நீங்குத் திருவருள் பெற்ற புனிதத் தலமாகிய திருவதிகை விரட்டானத்தில் அப்பருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. அதில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் புகழ்மாது விளங்க" என்ற தொடக்கத்துக் குலோத்துங்கன் கால்த்துக் கல்வெட்டும் (ஒன்று) இருக்கின்றது" - பெரிய புராண உரை - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - பக்கம் 770. (தொடர்ச்சி. பக்கம் 221)