உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை திருப்புகழ் உரை 219 743. விஷமும் வேலும் போன்றனவும், மலர் போன்றனவுமான கண்களும், ருசியைத்தரும் அமுது என்று சொல்லும்படியுள்ள மொழிகளும், உற்சாகத்துடன் வளர்ந்துள்ள இரண்டு கொங்கை உறுப்புக்களும் இன்பம் தருவனவாய்க் கொண்டு - மிக்க அகங்காரத்தையும் -91էՔ(3, நலத்தையும் கொண்டவர்கள், (ஆண்மக்களின் தொழில் திறமும், ஆவியும் இரண்டும் ஒரு சேரவேதங்களுடைய பெரிய வலையிலே பகிரங்கமாகவே சிக்கும்படி (அந்த வலையை) வீசுகின்ற விஷமிகளுடன் மேவி - சேர்ந்து துன்பப்படாமல், உன்னை நினைக்கின்றவர்களின் துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படுகின்ற 6T(ւք பிறவி என்கின்ற (உவரியினிடை) கடலிடையே (கெடா து) அகப்பட்டு அழியாமல், இனியேனும் இருவினை என்கின்ற இழிந்த நிலையில் இறங்காமல் புகழுடனே நாள்தோறும் தேவர்கள், முநிவர்கள் விண்ணுலக அரசன் இந்திரன் ஆதிய தேவர்களின் துன்பம் தொலைய அருள் புரிந்த இறைவனே! உன்னுடைய பன்னிரு புயங்களைப் (போற்றி) உரைக்க அருள்புரிவாயாக. பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்திலுள்ள இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்ன கிரீடங்கள் விளங்கும் ஒப்பற்ற பத்துத் தலைகளும் பூமியில் அற்றுவிழ ஒரு அம்பைச் செலுத்தினவர், (இடம்) சந்தர்ப்பம் (ஆராய்) ஆராய்ந்தறிந்து கடலின் மீது எரி அம்பைப் பிரயோகித்தவர், தம்மைப் போற்றுபவர்களுடைய வினைகெட அருள் பாலித்துப், பரந்துள்ள பாற்கடலில் பாம்பணையில் துயில் கொள்பவரின் மருகனே! நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை (உணவு கிடைத்த மகிழ்ச்சியால்) அரகரா என்று மகிழ்ந்து கூவி பேய்கள் உணவு உண்ண, அலை வீசி அலையும் கடலும் கூச்சலிட, எதிர் பொருத-சண்டை செய்த மயில் வீரனே!