பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/785

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 746- பிறவிநோயற தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன தனதான வெகுமாய விதத்துரு வாகிய திறமேபழ கப்படு சாதக விதமேழ்கட லிற்பெரி தாமதில் சுழலாகி, வினையான கருக்குழி யாமெனு மடையாள முளத்தின்ரின் மேவினும் விதியாரும் விலக்கவொ னாதெனு முதியோர்சொல், தகவாம தெனைப்பிடி யாமிடை கயிறாலு மிறுக்கிம காகட சலதாரை வெளிக்கிடை யேசெல வுருவாகிச். சதிகாரர் விடக்கதி லேதிரள் புழுவாக நெளித்தெரி யேபெறு மெழுகாக வுருக்கு முபாதிகள் தவிர்வேனோ, உககால நெருப்பதி லேபுகை யெழவேகு முறைப்படு பாவனை யுறவே குகை யிற்புட மாய்விட வெளியாகி. உலவா.நர குக்கிரை யாமவர் பலவோர்கள் தலைக்கடை போயெதிர் உளமாழ்கி மிகக்குழை வாகவு முறவாடித் தொகலாவ தெனக்கினி தானற வளமாக அருட்பத மாமலர் துணையே பணியத் தருவாய்பரி மயில்வேலா!