உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை துதிமாதவர் சித்தர்ம கேசுரர் அரிமால்பிர மர்க்கருள் கூர்தரு துறையூர் நக ரிற்குடி யாய்வரு பெருமாளே.(2) திருநாவலூர், (இது திருநாமநல்லூர்' என வழங்குகின்றது. பண்ணுருட்டிக்கு மேற்கு 11.மைல், உளுந்துருக்குப் போகும் பாதை சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருஅவதாரம் செய்த ஸ்தலம்; அவருடைய பாடல் பெற்றது. ஸ்தல புராணம் உண்டு.) 747. அகப்பொருள் தானதன தத்த தானதன தத்த தானதன தத்த தனதான கோல “மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட கணையாலேகோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற கோகிலமி குத்த குரலாலே; ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழலி றைக்கு நிலவாலே. t ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த மாசை கொட னைக்க வரவேணும்; # நாலுமறை கற்ற Xநான்முகனு தித்த நாரணனு மெச்சு மருகோனே. நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து நாகமற விட்ட மயில்வீரா, சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி த்னத்தி லனைவோனே. சீதவயல் சுற்று நாவல்தணி லுற்ற தேவர்சிறை விட்ட பெருமாளே.(1)

  • மறை-உருக்கரந்த வேடம் - மறைந்த வேஷம்.

'மறைவல்லன் மடவாய் யான்" - சிந்தாமணி 2027, f மன்மதன் கணை, குயிலின் குரல், நிலவொளி - இவை காமம் கொண்டவர்க்கு வேதனை தருவன - (பாடல் 218 பக்கம் 54)

  1. மறைவல்ல நான்முகனும்" - சம்பந்தர் 3-54-10,

X "நான்முகனை நாராயணன் படைத்தான்" - இயற்பா - நான்முகன் திருவந்தாதி -1.