பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/788

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாலுர்) திருப்புகழ் உரை 229 துதிக்கின்ற மகா தவசிகளும், சித்தர்களும் மகேசுரன், (அரி) இந்திரன், திருமால், பிரமா இவர்களுக்கெல்லாம் திருவருள் பாலிக்கும் பெருமாளே! துறையூர் நகரில் குடியாய் வந்து வீற்றிருக்கும் பெருமாளே! - (உபாதிகள் தவிர்வேனோ) திருநாவலூர். 747. அழகிய (மறை) உருக்கரந்த (மறைந்த வேஷத்துடன் மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும், (கோரம்) கொடுமை வாய்ந்தவனுமான மன்மதன் செலுத்தியுள்ள (புட்ப) பாணங்களாலும், (கோது இல தருக்கள்) குற்றம் - பயனின்மை இல்லாத நல்ல செழிப்பான மரங்கள். பொருந்திய சோலையில் உள்ள குயிலின் பலமான குரலாலும் . (ஆலம் என) விஷச் சுவாலைகளை எறிந்து வீசும் ஒளி மூலமாக நிறைந்து நெருப்பைப் பரப்பி இறைக்கின்ற நிலவாலும் ஆவியானது தளர்ச்சியடைந்து வாடுகின்ற என்னை தினந்தோறும் ஆசையுடனே அணைக்க வரவேணும்; நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த நாரணனும் மெச்சுகின்ற மருகனே! (நாவலர்) புலவர்கள் மதிக்கும்படி வேலாயுதத்தை எடுத்து (நாகம்) (கிரவுஞ்சமலை) பொடிபடச் செலுத்தின மயில் வீரனே! சேல்மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப் பெண்ணின் சீரும் அழகும் கொண்ட கொங்கையில் அணைபவனே! குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள நாவலூரில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே! (ஆசைகொடணைக்க வரவேணும்)