பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்ணெய்நல்லுர்) திருப்புகழ் உரை 23? 748. Լ13Ն) Լ16Ն) ՅlIIT GԾT (தத்துவம் அதனை) தத்துவ சேஷ்டைகளையும், (எரித்திருள்) (இருள) - அஞ்ஞான இருளையும் (எரித்து) எரிசெய்து, (பரை) சிவபிரானது அருட்சத்தியே (அரணம்) - காவலாகப், (படர்) துக்கங்களை (வட அனலுக்கு இரைபட) Gl/Løl/s முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, (நடனச்சுடர்) நடன ஜோதியை (பெருவெளியில்) பரந்த பராகாச வெளியிலே (கொள்) கண்டுகொள்ளும் படியாக (இடம் மேவி)- (பொருந்திய இடத்தை) விந்து நாதம் கூடும் முகப்பிற் சேர்ந்து வாயுவை அடக்கி, (இருவழியை) இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு வழிகளையும் மாற்றி அடைத்து (ஒரு பருதி வழிப்பட விடல்) ஒப்பற்ற சூரிய ஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, (ககனத்தொடு) ஆகாய வெளியில், (பவுரிகொள) நடனம் கொள்ளச் சிவமயமாய் முற்றும் பரந்த பரவெளியில் - கலகலென்று கழலும் சிலம்பும் அழகிய திருவடியில் ஒலி நிரம்பத் திருநடனம் இயற்றிய பொற்சபையில் உருகி நின்று (நிறைக்கடல்) நிறைந்த சுகானந்த கடலில் முழுகுவதால் - (கவுரி) தேவி பார்வதி, மின்னல் ஒத்த சடையுடைய பரசிவன் இவரொடு - (அல்லது) (இவர்தம் திருவருளால்) எப்போதும் குற்றமற்ற (சகத்துவம்) "உலகத்தொரு நீயாகத் தோன்றும்" நிலை வந்து கூடவும், இவ்வாறு கழியும்படியான (நலக்கு) நன்மையால் இனி (நிறம்) புகழொளி (என் நவிற்று உடல்) எனக் கூறப்படும் உடலைத் தந்தருளுக, (புகழுடலே நிலைத்து நிற்குமாதலின்); (புலையர்) இழிந்தோர், (பொடித்தளும்) திருநீற்றை விலக்கித்தள்ளும் (அமணர்) சமணர்களின் உடல்களை (நிரையில் கழுக்களில்) கழு நிரையில் - கழுமுனை வரிசைகளில் (உறவிடு) பொருந்தவிட்ட, சித்திர புலவன் 3.ΤζΜΤ - விசித்திரமான - அல்லது, சித்திரகவி பாடவல்ல - புலமை கொண்டவன் எனச் சில வெற்றிச் சின்னங்களைப் பெற்ற இளையவனே!