உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புனமலை யிற்குற மகளய லுற்றொரு கிழவ னெனச்சுனை தணில வளைப்புய புள்கித முற்றியம் வரவனை யப்புணர் மணிமார்பா: மலைசிலை பற்றிய கடவு னிடத்துறை கிழவி யறச்சுக் குமரி தகப்பனை மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் முருகோனே. மகிழ்i_பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத # மயிலின் மிசைக்கொடு திருநட_ மிட்டுறை பெருமள்ள்ே.(1) திருப்பாதிரிப்புலியூர். (ரெயில்வே ஸ்டேஷன், கூடலூருக்கு வடக்கு 3 மைல் கெடில நதியின் தென்கரையி லுள்ளது. திருஞான்சம்பந்த ஸ்வாமிகள். திருநாவுக்கரசு ஸ்வாமிகள் இவர்களுடைய பாடல்பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 749. உபதேசம் பெற தனதன தனண தணந்த தாணன தனதன தனண தணந்த தாணன தனதன தனண தணந்த தாணன தனதான நிணமொடு குருதி நரம்பு மாறிய தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை நிரைநிரை செறியு முடம்பு நோய்படு முதுகாயம் நிலைநிலை யுருவ மலங்க ளாவது நவதொளை யுடைய குரம்பை யாமிதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ முயவோரும்; * தகப்பனை மழுகொடு வெட்டிய நிமலிகை பிதாவாகிய (மதியாத) தக்கனை வீரபத்திரரால்) மழுக்கொண்டு வெட்டுவித்த நின்மலி - பாடல் 390.பக்கம் 484-185 கீழ்க்குறிப்பு. t பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறை" சுந்தரர் தேவாரம் -7-1-1

  1. மயிலின் மிசை நட்டம் திருவெண்ணெய் நல்லூரில் அருணகிரியார்க்கு (மயில்மேல்) நடன தரிசனத்தை முருகவேள் தந்தனர் என்பது இதனாற் பெறப்படும்.