உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிப்புலியூர்) திருப்புகழ் உரை 233 (புனமலையில்) தினைப்புனம் உள்ள வள்ளி மலையில் குறமகள்) வள்ளியின் (அயல் உற்று) பக்கத்திற் சென்று, ஒரு கிழவன் என ஒரு கிழவன் என வேடம் பூண்டு, சுனையிலே அவளது புயத்தைப், புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட அணைந்து புணர்ந்த அழகிய மார்பனே! (மலை) மேரு மலையை வில்லாகப் பிடித்த சிவபிரானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், தருமமே புரியும் சுக குமாரி, பிதாவாகிய தகப்பனை - தக்கனை - மழுக்கொண்டு வெட்டுவித்த நின்மலி பெற்றருளிய குழந்தையே! மகிழ்ச்சி தரும் பெண்ணை யாற்றின் கரையில் சோலையும் மேகமும் சூழ்ந்த திருவெண்ணெய் என்னும் நல்ல ஊரில் புகழ் விளங்க அற்புதகரமான மயிலின்மேல் வீற்றிருந்து திருநடனம் புரிந்து விளங்கும் பெருமாளே! (நிறமெனவிற்றுடல் அருள்வாயே) திருப்பாதிரிப்புலியூர், 749. (நிணம்) மாமிசத்தொடு ரத்தம், நரம்பு இவை, கலந்துள்ள சதை, குடல், நெருங்கியுள்ள எலும்பு, தோல், இவை வரிசை வரிசையாக நெருங்கியுள்ள உடம்பு, நோய் உண்டாகும் பழைய உடல் - அந்த அந்த நிலைக்கு ஏற்ப (வயதுக்குத் தக்கபடி) உருவமும் (மலங்களும்). உடல் மாசுகளும் உண்டாவதும், ஒன்பது தொளைகளை உடைய (குரம்பையாம் இதில்) சிறு குடிலாகிய இந்த உடலில் (நிகழ்தரு பொழுதில்) இந்த உயிர் உலவும் பொழுதே உயிருடன் இருக்கும்போது வேண்டிய முயற்சிகளைச் செய்து (மாதவம்) சிறந்த தவங்களை (உய) உய்யும் பொருட்டு, (ஒரும்) உணரும்