உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தாசலம்) திருப்புகழ் உரை 247 நறுமணங்கொண்ட நீண்ட கூந்தலை I_GIML-LLI தேவலோகத்து அரம்பை மகளிர் தத்தம் காதலர்களுடைய தோள்களை விரும்பிப் பொருந்திக் களிப்புச் சிரிப்புடனே ஏழிசை பாடியும் குதூகலித்து மகிழ்ச்சி பொங்கவும் நடுநிலைமை (நியாயம்) இல்லாதவராய், (குரோதமாய்) கோபம் மிக்கவராய், (தடிந்த) அழிதொழிலைச் செய்த அசுரமகளிர் தங்கள் கணவர்களின் தோள்களைப் பிரிந்து, தங்கள் ஆசையை அடக்கமுடியாமல் அழுது தங்கள் தேகத்தை ஒறுத்துத் துன்பம் கொண்டு வருத்தமே பெருகவும் (மறியும்) அலைகள் கிளர்ந்து எழும் ஆழ்கடலின் உள்ளே சென்று மறைந்து கிளைகள் கோடிக்கணக்கின் மேலாக விரிந்து வளர்ந்த (சூரனாம்) மாமரம் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த கூரிய வேலாயுதனே! --- பொருந்திய கருமேகங்கள் கூட்டமாய் எழுந்து, நிலவு உலவுகின்ற மாடங்களின் மேற் படிகின்ற திருநெல்வாயிலில், வயல்கள் உள்ள, திருநெல்வாயிலில் வீற்றிருக்கும் பெருமாளே! (புழுவாயினேற் கிரங்கி அருள்வாயே) விருத்தாசலம். 754. குடம் என்றும், தாமரை மொட்டு என்றும், உவமிக்கத்தக்க இரண்டு கொங்கைகளை உடையவர் பிறைபோன்ற ஒளி பொருந்திய நெற்றியர், இருள்போல இருண்ட கூந்தல் - காடுபோல அடர்ந்து, மேகம்போலக் கறுத்து, முதுகில் அலைமோதுவது போலப் புரள, 246-ம் பக்கத் தொடர்ச்சி கவடு பலபோக்கிக்*கீழ்மேல் நின்ற அக்கொடுந் தொழிற் கொக்கு - கல்லாடம்.