உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குலக் 'கார்மயி லாமென வேகயல் விழித்தார்கர மேல்கொடு மாமுலை குட்த்தியாழ்கிளி யாமென வேகுயில் குரலோசை, படித்தார்மயி லாமென வேநடை நெளித்தார்.பல காமுகர் வார்கலை பழிப்பாரவ ராசையை மேல்கொடு விலைமாதர். படிக்கார்மின லாமென வேநகை புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் பறிப்பார்பழி காரிகள் நாரிக ளுறவாமோ, t அடைத்தார்கட லோர்வலி ராவன குலத்தோடரி 4 யோர்சர னார்சின மழித்தார்முகி லேய் நிற ராகவர் மருகோனே. Xஅறுத்தாரய னார்தலை யே Oபுர மெரித்தாரதி லேபுல னாருயி ரளித்தா **ருடல் பாதியி லேயுமை அருள்பாலா,

  • கார்மயில் - மேகத்தைக் கண்டால் மயிலுக்கு மகிழ்ச்சி. "கார்பெற்ற தோகையோ"- நளவெண்பா - கலிநீங்கு -92

1 கடலை அடைத்தது - சேதுபந்தனம் செய்தது - பாடல் 149 அடி 5 பாடல் 177-பக்கம் 412 கீழ்க்குறிப்பு. இராமர் பாணத்துக்கு அஞ்சின வருணன் கடலில் அணை செய்து நீங்கள் போகலாம் என்று பூரீராமருக்கு உரைக்க, அங்ங்ணம் அணைகட்டிக் கடலை அடைத்து ஆரீராமர் சேனைகளுடன் சென்றனர். செல்லுதி சேது வென்றொன் றியற்றியென் சிரத்தின்மேலாய்' *குன்றி கொண்டடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச் சென்றனன் இருக்கை நோக்கி வருணனும்". கம்பராமா - வருணனை வழி 84, 85 'எய்த யோசனை யீண்டொரு நூறிவை செய்ததால் அணை என்றது. செப்பினார் வையநாதன் சரணம் வணங்கியே" - கம்பராமா சேதுபந்தனம் 71 # ஓர் சரம் - பாடல் #52-பக்கம் 6 கீழ்க்குறிப்பு. (249 ஆம் பக்கம் பார்க்க)