பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/826

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 திருப்புகழ் உரை [فوإشاة நாராயணன், பூரீராமன், கேசவன், கூர்மை கொண்ட சக்ராயுதந் தரித்த நாயகன் - பூவாயன் - (பூ - பூலோகத்தில் ஆயன் - (ஆயர்) இடையர் குலத்துவந்த கண்ணபிரான்; அல்லது ("பூ - தாமரைப்பூ அன்ன வாயன் - திருவாயை யுடையவன்), அல்லது (பூ - பூதேவிக்கு - வாயன் - நாயகனாக வாய்த்தவன்), அல்லது (பூ - i பூவுலகை (உண்டு அதைத் தன் தாய் யசோதைக்கு) வாய் திறந்து காட்டினவன்) ஆகிய திருமாலின் மருகனே! நாரதர் தும்புரு இவர்கள் இசைபாட நின்று ஆடுகின்ற நடனத்தைச் செய்கின்ற திருவடியையுடைய சிவபெருமான் அருளிய குழந்தையே! சூரனும் அவன் வருத்துஞ் செயல்களும் கடலிற்போய் (மாமரமாய்க் கிடந்தே) அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படித் தடையின்றி) ஒடவும் வேலாயுதத்தைச் செலுத்தினவனே! \ பரிசுத்தமான மணம் வீசுகின்ற காவிரியுடன் சேர்கின்ற ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே! தேவர் பெருமாளே! - (சீதளம் பாதாரம் அருள்வாயே)

  • பூ - ' ஆம்பூ முழங்கி" திருப்புகழ் 1187.

fவராக அவதாரத்திலும், இறைவன து திருவடியைத்தேட வராகமாய் அமைந்தபோதும், மண்ணை வாயாற் கிண்டினவன் அடியார்களின் இதயப் பூவில் இருப்பவன் எனலுமாம் : அகண்டலோகம் உண்ட மால் பாடல் 719.