பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 77 சித்தத்துக்கு (மனதிலே பித்து உற்று (காம வெறி கொண்டு) (உச்சம்) அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடிபோன்ற பெண் அடைந்து அழிவுபடாமல் உனது (செப்பமானதும்) செவ்வையானதும் (கொற்றம்) வீரத்துக்கு அறிகுறியானதும், (சிற்பம்) தொழில் திறம் காட்டுவதும். (பத்தி) வரிசையாய் அமைந்ததுமான வெட்சிமாலையைத் தந்தருள வேண்டும் நிறைந்துள்ள (திக்குப்பத்துள்) வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு - வடகிழக்கு, தென் கிழக்கு, வடமேற்கு தென்மேற்கு மேல். கீழ் எனப்படும்) பத்துத் திக்குகளிலும் வேலால் குத்திக் கிரெளஞ்சகிரியுடன் (அல்லது) ஏழுகிரியுடன் சண்டைசெய்த வேலனே! திருந்தாப் பேச்சு பேசுபவளும், (பொச்சை) காடு மலைகளில் ப்பவளும் அழகிலே பச்சைநிறங் கொண்டவளும், இழிகுலமாம் குறக்குல்த்தவளுமான வள்ளிக்கு இனியவனே? = :: (பத்தத்தர் பக்த அத்தர்பத்தியில் உயாநத்தாகளுடைய மனததல உளள துககங்களை ஒழித்திடுகின்ற வீரனே!

  • சொர்க்கத்துக்கு (தேவருலகுக்கு) ஒப்பான கச்சி எனப்படும் அழகிய திருப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!

(செச்சைத் தொடையைத் தரவேணும்) உள்ளுறை பாட்டின் உரை ஒலி செய்கின்ற கரிய கடலாலும், எதிர்ப்படும் சந்திரனாலும், அழகிய கொடிபோன்ற இப்பெண் அழிவுறாமல், (உனது) வெட்சிமாலையைத் தரவேணும்; குத்தி மலையைப் பொருத வேலனே; இழிகுலக் குறத்திக்கு இனியவனே! துக்கத்தை ஒழிக்கும் வீரா! சுவர்க்கப்பதியில் (அமராவதியிற்) பெருமாளே.

  • சொர்க்கம் - சுவர்க்கப்பதிஅமராவதி.