பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில்) திருப்புகழ் உரை 325 வைத்தீசுரன் கோயில் 783. (உரத்துறை) உரம் - துறை) வன்மைக்கிடமான அல்லது (உரத்து உறை வன்மையொடு பொருந்திய (போதம்) ஞானத்தின் தனிப் பொருளான - உன்னைக் கொஞ்ச்மேனும் போற்றத் தெரியாமல்; மரத்து உறை - மரப்பண்டம், மரத்துறை - மரமாம் இடம் - மரக்கட்டை போல இருந்து அடியேனும் - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் இருள்மூடி நான் கெட்டுப்போகலாமா! (கெட்டுப் போகலாகாது) என்றபடி மேலான நிலையில் உள்ள புனித வாழ்க்கையர்களின் செல்வமே! (பணித்து அடி) அடியிற் பணிவித்து வாழ்வு உறும்படி அருள்வோனே! வரந்தரும் வழியையே தமது நீதியாகக் கொண்ட சிவனது '! ெ G வயித்தியநாதராம் பrருமாளே! (அல்லது) வயித்திே 鷲7 ற்குப் ఫేస్:: து. (மலத்திருள் மூடிக் கெடலாமோ) 784. எத்தனை கோடி கோடிக் கணக்கான (உடலை) விட்டுப் (புது) உடலில் ஒடிப்புகுந்தும், ஆடியும், இங்ஆனம் எத்தனை க்ேர்டி (ப்பிறப்பு) வந்து போய்விட்டது. இதற்கு அளவும் உண்டோ!

  1. சிவபிரான் வரத்துறை நீதர் - அதனால்தான் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்றார் அப்பர் 6.23-1.

x முருகவேளைப் பவரோக வயித்தியநாதப் பெருமாள்' என்பர் அருணகிரியார் பாடல் 293-பார்க்க வைத்திசுரன் கோயிற் சிவபிரானுக்கு வைத்தியநாதப் பெருமாள்' என்று பெயர். "மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித் திராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை" அப்பர் 6.548, "நடம் நவிற்று திறல் வேளுர் வயித்திய நாதனைப் போற்றுதும்" - முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத்தமிழ் காப்பு (3)