பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 371 சிறப்புற்ற மகாதவசிகளும், முநிசிரேஷ்டர்களும், இந்திரனும், இருக்குவேத்ம் வல்ல பிரம்னும், தேவர்களும் போற்றிப் பர்வின பெருமாளே! திருக்குராமரத்தின் அடிநிழலில் விளங்கிப் பொலியும் பெருமாளே! (இருகழல் மலர்தொழ அருள்தாராய்) 802. நறுமணம் கமழும் மலர்ப்படுக்கை கொதித்துச் சூடு தராமலும். - வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசைமொழிகளைப் பேசாமலும் (கரு) காரணம் வைத்துக்கொண்டு စ္တပ္အဖ္ရစ္သို႔) நட்பாடின (அல்லது கருக்கு உலாவிய புத்திகூர்மை கொண்ட) அயலார்கள் பழிச்சொல் கூறாமலும் (நீ உனது) கடப்ப மலர்மாலையை இனி அனுப்பிவைக்க வேண்டுகின்றேன்; கற்பக விருகூடித்தின் கீழ்விளங்கிய கொடிபோன்ற இடையை உடைய தேவசேனையின் மணவாளனே! சமர்த்தனே! மணிநிறம் மரகத நிறம் கொண்ட மயில் வீரனே! திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில் வீற்றிருப்பவனே! திருக்கையில் வேல் (ஏந்தின), திருவுருவம் அழகுள்ள, பெருமாளே! (கடப்பமாலையை இனிவர விடவேணும்) 803. கொங்கையைக் குலுக்குபவர்கள், வஞ்சனை நெஞ்சினர், வடித்து எடுக்கப்பட்ட புழுக்கைகள் (பிழுக்கைகள்), முட்டாள்கள், (மாமா, அத்தான் என) முறை கூறி (அல்லது) அவர்கள் குலதரும முறைப்படி) மயங்கச் செய்பவர்கள், திருடிகள், காமவேளினுடைய நூலிற் (கொக்கோக சாத்திரத்திற்) கூறியபடி பேச்சினால் ஏய்ப்பவர்கள், (விகடிகள்) கபடம் (அல்லது செருக்கு) உடையவர்கள், சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள், தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள், குற்றம் உள்ளவர்கள், இடையில் இடுப்பிற் சூழ்ந்துள்ள