பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/945

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருமாகாளம் ஃது அம்பர் மாகாளம் என்னும் ஸ்தலமாய் இருக்கலாம். பேரளத்துக்குத் தென்கிழக்கு சுமார் 4 மைல் திருஞானசம்பந்த ஸ்வாமிக ளுடைய பாடல பெற்றது. கீழ்வேளுர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சுமார் 3 மைல் தூரத்தில் ஆனைமாகாளம்'என்னும் ஒருஸ்தலம் இருக்கின்றது.) 810. நாம விசேடம் தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தனதான காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல கோலாக லாரமுலை மார்புதைய பூனகல காரோடு கூடாக பாரமல ரோடலைய அனைமீதே. காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ டேகாச மாணவுடை வீசியிடை நூல்துவள காவீர மாணஇத மூறல்தர நேரமென மிடறோதை நாதான கீதகுயில் போல அல்குல் மால்புரள மார்ப்ோடு தோள்கரமொ டாடிமிக நாணழிய நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் படுவேனை நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர் சீர்ப்ாத மேகவலை யாயுமுன வேநிதமு *நாதாகு மாரமுரு காஎனவு மோத அருள் வாயே: பாதாள சேடனுட லாயிரப ணாமகுட மாமேரொ டேழுகட லோதமலை ஆரருடல் பாழாக தூளிவிளி லேறபுவி வாழவிடு சுடர்வேலா.

  • நாதா குமார முருகா - நாதா குமார நம் என்பது மந்திரம் நாதா குமார நம என்றரனார் ஒதாய் என ஒதியது கந்தரநுபூதி 36