பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/951

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இன்புறுபொற் கூட மாட நவமணி மண்டப்வித் தார வீதி புடைவளர் இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய பெருமாளே.(1) திருநள்ளாறு. (ரெயில்வே ஸ்டேஷன். காரைக்காலுக்கு மேற்கு 3 மைல். மூவர் தேவாரமும்பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 812. குமரா என உருக தத்த தந்தன தானன தானன தத்த தந்தன தானன தானன தத்த தந்தன தானன தானன தனதான *பச்சை யொண்கிரி போலிரு மாதன முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல் விழிஞான. பத்தி வெண்டர ளாமெனும் வாணகை t வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ் பத்ம செண்பக மாமது யி னழகாளென்: றிச்சை யந்தரி பார்வதி தத்தை பொன்கவி னாலிலை போல்வயி ற்ப சுங்கிளி யானமி னுாலிடை யபிராமி. எக்கு லங்குடி லோடுல கியாவையு

  1. மிற்ப திந்திரு நாழிநெ லாலற மெப்பொ தும்பகிர் வாள்கும ராான வுருகேனோ,
  • பச்சை" எனத்தொடங்கி உமாதேவியாரின் பெருமையை ஒதும் இச் செய்யுள், மதுரையிற் சமணர்கள் சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுடன் வாது செய்கையில், ஸ்வாமிகள், தேவாரத் திருப்பதிகங்களுள் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் உமாதேவியாரின் பெயராகிய போக மார்த்தபூண் முலையினாள்..." என்னும், அத்தலத்துப் பாடலுள்ள ஏட்டைத் திருவருளாற் பெற்ற அதனை நெருப்பிலிட அது பச்சையாகவே இருந்த அற்புதத்தைக் குறிப்பால் விளக்குகின்றது.

t வித்ருமம் - சிலை - இதழ் - நுதல் என வரிசைப் படுத்தாது துதல் இதழ் என்று இடம் மாறி உவமை கூறினது முரண் நிரனிறையணி (நிரலே நிறுத்தி மொழிமாற்றிப் பொருள் கொள்வது)

  1. இருநாழி நெல்லால் அறம் வளர்த்தது

பாட்டு 460 பக்கம் 34 கீழ்க்குறிப்பு.