பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/968

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்காட்டங்குடி) திருப்புகழ் உரை 409 (மஞ்சு ஆடு சாபம்) - அழகு விளங்கும் வில் (அல்லது மேகத்தின் வான்வில்) போன்ற நெற்றி, வாள், வேல்போன்ற விழிகள், கொஞ்சுதல் மிக நிறைந்த ஆசைக் கிளிபோன்று சிரிப்பு மொழிகளைப் பேசித் தம்மை நண்ணி வந்தவர்களை வாரும், இரும், நீர் (நமக்கு) உறவினராயிற்றே என்றெல்லாம் ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற (பொது) மாதர்கள். கூடிக் களிப்பவர்கள், (சூது) வஞ்சக ஒழுக்கத்தினர், கொலையும் செயுங் குணத்தினர், குடி கெடுப்பவர், திரிகின்றவர், அலங்கார தோளினர், பண ஆசை உள்ளவர்கள், சாதிபேதம் கவனிக்காத சண்டாளர்கள், சீசி, இத்தகையோரது மாயவலைகளிலே அடியேன் சிக்கி அலையாமல். (யோக வழியிற் கிடைக்கும்) சங்க ஒசை ஒலியை (தசநாதங்களை) அனுபவித் அது, மிக்க மாயையாம் இருள் வெந்து ஒழிந்துபோக, மூலாக்கினி வீசிட உபதேசத்தை (எனது) குளிர்ந்த காதில் ஒதி, (உனது) இரண்டு பாதமலரைக் கூடும்படியான திருவருளைத் தந்தருளுக. அலங்காரமான உருவத்தொடு கூடிய மயில் வாகனனே! (அல்லது அலங்காரமான உருவத்தனே! மயில்வாகனனே!) உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; கந்தனே! குமரனே! சிவனுக்குக் குருமூர்த்தியே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; (சிந்துாரம்) செம்பொடி குங்குமம் அணிந்துள்ள பார்வதியின் (சுத ஆகர) பிள்ளையாய் அமைந்தவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், என்று வெற்றிச் சின்னங்களின் ஒசை. கடல்போல முழங்க ஜோதிஒளி கொண்ட வேலாயுதனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் - எலும்பா. பரணனும், சடாமுடி உடையவனுமான சிவனுக்குக் குருமூர்த்தியானவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன், (என்று முழங்கவும்), வலிமை மிக்க சூரனாதியரும், கடலும், எழுகிரி - கிரவுஞ்சம் ஆகிய மலைகளும் பொடியாக (வை) கூரிய வேலைச் செலுத்தின முருகனே!